இந்திய தொலைத் தொடர்பு துறையானது பல சவால்களுக்கும் மத்தியில் உள்ள நிலையில், அவர்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு நிவாரணம் கொடுக்கும் வகையில் தொலைத் தொடர்பு துறை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அது, 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி உத்தரவாதங்களை வோடபோன் நிறுவனத்திடம் திரும்ப அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதே போல 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான உத்தரவாத தொகையை ஏர்டெல் நிறுவனத்திற்கும் திரும்ப அளிக்க திட்டமிட்டுள்ளது.
டிசம்பருக்குள் முழுதும் கிடைக்கும்
இதில் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி உத்தரவாதங்களை தொலைத் தொடர்பு துறை ஏற்கனவே ஏர்டெல்லி வழங்கியுள்ளது. இந்த வங்கி உத்தரவாதங்கள் முழுவதும் டிசம்பர் 31க்குள் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு சேவைக்கும் உத்தரவாதம்
முன்னதாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் நிதி வங்கி உத்தரவாத தேவையை 80% ஆக குறைக்கலாம் என கடந்த அக்டோபரில் அறிவித்தது. மேலும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உரிமத்திற்கான ஒவ்வொரு சேவைக்கும் 44 கோடி ரூபாய் வரையில் செயல்திறன் வங்கி உத்தரவாதத்தினை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு வட்டத்திற்கும் உத்தரவாதம்
பழைய விதிகளின் படி இது 220 கோடி ரூபாயாக இருந்தது. இதேபோல் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வட்டத்திற்கும் அதிகபட்சமாக 8.8 கோடி ரூபாய் வரை நிதி உத்தரவாதங்களை வழங்க வேண்டும். இது முன்னதாக 44 கோடி ரூபாயாகவும் இருந்தது.
செலவினைக் குறைக்கும்
தொலைத் தொடர்பு துறையின் இந்த அறிவிப்பானது, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வெகு சாதகமாக வந்துள்ளது. ஏனெனில் இது தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செலவினை குறைக்கும். மேலும் அவர்களின் பணத் தேவையினை குறைக்கும். குறிப்பாக உத்தரவாதமாக வழங்கும் தொகையானது குறையும். இதனால் அதிகளவில் நிறுவனங்கள் விரிவாக்கம் செய்ய முடியும்.
மிகப்பெரிய ரிலீப்
இதற்கிடையில் தான் வங்கி உத்தரவாதமாக அளிக்கப்பட்ட தொகையில், தொலைத் தொடர்பு துறையானது நிறுவனங்களுக்கு திரும்ப அளிக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தான் ஏர்டெல் நிறுவனத்திற்கு 8,000 கோடி ரூபாயும், வோடபோன் நிறுவனத்திற்கு 12,000 கோடி ரூபாயும் கிடைக்கும். குறிப்பாக ஏற்கனவே பலத்த கடன் பிரச்சனைகளுக்கு மத்தியில் தத்தளித்து வரும் வோடபோன் நிறுவனத்திற்கு இது மாபெரும் ரீலிப் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊக்கமாக அமையும்
மொத்தத்தில் ரிலையன்ஸ் ஜியோவால் கடும் இழப்பில் உள்ள ஏர்டெல் நிறுவனங்களுக்கு, இது சிறு தூண்டுதலாம் அமையும். இது முழுமையான கடன் பிரச்சனையை அடைக்க இந்த நிறுவனங்களுக்கு போதாது என்றாலும், அரசு ஏற்கனவே ஏஜிஆர் நிலுவையை செலுத்தவும் போதுமான கால அவகாசம் கொடுத்துள்ளது. ஆக இதற்கிடையில் இந்த வங்கி உத்தரவாத தொகையானது பெரும் ஊக்கமாக அமையும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications