அடுத்தடுத்து சோகம்.. என்விடியா பங்குகளை வாங்கியவர்கள் கண்ணீர்..!!

ஒட்டுமொத்த ஏஐ துறையும் இயங்குவதற்கான சிப் தயாரிக்கும் Nvidia நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங் சீன பெண் உளவாளி ஆலீஸ் ஹுவாங் மற்றும் என்விடியா ஹெல்த்கேர் பிரிவின் தலைவரான கிம்பர்லி பவல் ஆகிய 2 பெண்களுடன் திருமணத்திற்கு மீறிய கள்ள உறவில் இருந்துள்ளது உறுதியாகியுள்ளது.

இதை தொடர்ந்து என்விடியா நிறுவனத்தின் நிர்வாக குழு ஜென்சன் ஹுவாங்-ஐ சிஇஓ பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளையில் புதன்கிழமை கிம்பர்லி பவல் உடனான கள்ள உறவு குறித்த செய்தி வெளியான பின்பு என்விடியா பங்குகள் சந்தை மூடப்பட்ட பின்பு சுமார் 8 சதவீதம் வரையில் சரிந்து பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அடுத்தடுத்து சோகம்.. என்விடியா பங்குகளை வாங்கியவர்கள் கண்ணீர்..!!

இந்த முக்கியமான சூழ்நிலையில் அமெரிக்க பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான Baird, என்விடியா பங்கின் ரேட்டிங்-ஐ Outperform என்பதிலிருந்து Neutral ஆகக் குறைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் என்விடியா பங்கின் டார்கெட் விலையை 500 டாலரிலிருந்து 200 டாலராகக் குறைத்துள்ளது.

அதாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டார்கெட் விலையை காட்டிலும் சுமார் 60% குறைத்துள்ளது. இவ்வறிவிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டார்கெட் விலையை 60 சதவீதம் வரையில் குறைக்க ஜென்சன் ஹுவாங்-ன் கள்ள உறவு மட்டும் காரணமில்லை. ஏஐ கட்டமைப்புக்கான முதலீட்டு வளர்ச்சி, தற்போது இருக்கும் இதே வேகம் தொடருமா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

மேலும் கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய கிளவுட் நிறுவனங்களின் AI முதலீட்டு வளர்ச்சி அளவு 40 சதவீதம் வரையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏஐ டேட்டா சென்டருக்கு தேவையான சப்ளை செயின் ஆர்டர்கள் 10-30 சதவீதம் வரையில் குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் என்விடியாவின் H300 சிப்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்தாலும், இந்த கள்ள தொடர்பு மீதான விசாரணை, என்விடியா நிர்வாகம் ஜென்சன் ஹுவாங்-ஐ சிஇஓ பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான விஷயங்கள் என்விடியா நிறுவனத்தில் நிலையற்ற தன்மை உருவாகும் என Baird கணித்து டார்தெட் விலையை குறைத்துள்ளது.

ஏஐ துறை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலுக்கு பின்பு, என்விடியா பங்குகள் தனது அக்டோபர் 6ஆம் தேதி உச்ச அளவில் இருந்து 29% சரிந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5.8 டிரில்லியன் டாலரிலிருந்து சுமார் 4 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

இவை அனைத்திற்கும் மத்தியில் நவம்பர் 17ஆம் தேதி என்விடியா தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. இக்காலாண்டு முடிவு என்விடியா வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+