மீண்டும் மீண்டுமா.. சிகரெட் விலை 10 ரூபாய் உயர்வால் மக்கள் அதிர்ச்சி..!

இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஐடிசி தனது முக்கிய விற்பனை பொருளான கோல்டு ஃப்ளேக் சிகரெட் விலையை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த வருட துவக்கத்திலேயே அதிரடியான விலை உயர்வை அறிவித்த ஐடிசி 2வது முறையாக விலையை உயர்த்தியது மூலம் மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கோல்டு பிளேக் 69mm சிகரெட் விலை ஒரு பாக்கெட் 125 ரூபாயில் இருந்து 135 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு பிப்ரவரி மாதம் ஒரு பாக்கெட்-க்கு 30 ரூபாய் உயர்த்தப்பட்டது.

மீண்டும் மீண்டுமா.. சிகரெட் விலை 10 ரூபாய் உயர்வால் மக்கள் அதிர்ச்சி..!

இதன் மூலம் ஜனவரி மாதம் 95 ரூபாய் விற்கப்பட்ட இந்த சிகரெட் தற்போது 135 ரூபாயாக உயர்ந்துள்ளது, இது புகைப் பிடிப்போருக்கு பெரும் நிதி நெருக்கடியாக மாறி வருகிறது. ஐடிசி நிறுவனத்தின் மொத்த சிகரெட் விற்பனை வர்த்தகத்தில் சுமார் 30-35 சதவீத பங்கீடு இந்த கோல்டு ஃபிளேக் 69mm சிகரெட் மட்டுமே பங்கு வகிக்கிறது.

மத்திய அரசு சிகரெட் மீதான வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டது மூலம் ஐடிசி தொடர்ந்து விலையை உயர்த்தி வருகிறது, இந்த விலை உயர்வு காரணமாக வர்த்தகம், வருமானம், லாப அளவீடு அதிகமாகப் பாதிக்கப்படுவதாக ஐடிசி தெரிவித்து வருகிறது.

Also Read

செப்டம்பர் காலாண்டு முடிவில் ஐடிசி நிறுவனத்தின் லாப அளவுகள் கடந்த ஆண்டை காட்டிலும் 20.1 சதவீதம் வரையில் குறைந்து 4,137.12 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 5,180 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐடிசி நிறுவனத்தின் வருவாய் 1.8 சதவீதம் மட்டும் அதிகரித்து 18,401 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் ஐடிசி நிறுவனத்தின் சிகரெட் அல்லாத வர்த்தகத்தின் மூலம் 14 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகப்படியான வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஆனால் வரி உயர்வு மூலம் செப்டம்பர் காலாண்டில் சிகரெட் பிரிவின் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபம் 27 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல் இப்பிரிவின் வருவாய் 21 சதவீதம் சரிந்துள்ளது.

இந்த லாப சரிவை சரி செய்யவே ஐடிசி நிறுவனம் தனது சிகரெட் விலையை உயர்த்துகிறது எனில் அடுத்த காலாண்டில் இப்பிரிவு லாபகரமாக மாறுமா என்ற கேள்வியும் எழுகிறது. இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி பங்கு விலை 0.33 சதவீதம் சரிந்து 284.05 ரூபாயாக உள்ளது. இதேபோல் 2026ல் மொத்தம் 21.93 சதவீதம் சரிந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+