Over Time வேலைக்கு டபுள் சம்பளம்!! ஊழியர்களே புதிய தொழிலாளர் சட்டம் என்ன சொல்லுது தெரியுமா?

இந்திய நிறுவனங்களில் வேலை நேரம் முடியும் போது திடீரென பாஸ் அழைத்து கொஞ்சம் நேரம் இருந்து இந்த வேலையை முடிச்சிட்டு போங்க என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. பெரும்பாலான நாட்களில் ஊழியர்கள் கூடுதல் 15 முதல் 30 நிமிடங்கள் வரை இருந்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இதற்கு எக்ஸ்ட்ரா ஊதியம் கிடைக்கிறதா என்றால் கிடையாது.

இனி உங்களின் பாஸ் அல்லது மேலாளர் கொஞ்சம் இருந்து வேலை முடித்துவிட்டு செல்லுங்கள் என கூறினால் இந்த தொழிலாளர் சட்டத்தை எடுத்து காட்டுங்கள். மத்திய அரசு அண்மையில் புதிய தொழிலாளர் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதன்படி தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சாதகமாக சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.

Over Time வேலைக்கு டபுள் சம்பளம்!! ஊழியர்களே புதிய தொழிலாளர் சட்டம் என்ன சொல்லுது தெரியுமா?

அந்த வகையில் நிறுவனங்களில் நீங்கள் ஓவர் டைம் எனப்படும் வேலை நேரம் தாண்டி கூடுதல் நேரம் வேலை செய்தால், அதற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் கடந்த 1ஆம் தேதி நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி கூடுதல் நேரத்திற்கு நிறுவனங்கள் வழக்கத்தை விட கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்.

Also Read

உதாரணமாக நீங்கள் வேலை நேரம் முடிந்த பிறகும் அலுவலகத்தில் தங்கி வேலை செய்கிறீர்கள் என்ரால் அந்த கூடுதல் நேரத்தை கணக்கிட்டு சம்பளம் வழங்க வேண்டும். புதிய திய தொழிலாளர் சட்டத்தின் படி, உங்கள் ஷிப்டுக்குப் பிறகும் நீங்கள் கூடுதல் நேரம் வேலை செய்தால் உங்கள் நிறுவனம் சாதாரணமாக வழங்கும் ஊதியத்தை விட இருமடங்கு உங்களுக்கு ஊதியம் அந்த கூடுதல் நேரத்திற்கு வழங்க வேண்டும். அதாவது, 1 மணிநேர கூடுதல் நேரத்திற்கு, வழக்கமான 2 மணிநேர வேலைக்கான ஊதியம் கிடைக்கும்.

Recommended For You

வழக்கமாக உங்களுடைய ஷிப்ட் நேரத்தில் 1 மணி நேரத்திற்கு 500 ரூபாய் சம்பளம் என்றால், ஓவர் டைமில் 1 மணி நேரத்திற்கு 1000 ரூபாயாக வழங்க வேண்டும். இந்த புதிய விதிகளின்படி, 15 முதல் 30 நிமிடங்கள் வரையிலான கூடுதல் வேலை கூட 30 நிமிட கூடுதல் நேரமாகக் கருதப்படும்.

குடும்ப வறுமைக்காக ஓவர் டைம் பார்க்கும் ஊழியர்களுக்கு இந்த சட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். மொத்தமாக ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் வரை ஊழியர்கள் வேலை செய்யலாம். இதனை வாரத்தின் 6 நாட்கள் அல்லது 5 நாட்கள் என பிரித்து மீதமுள்ள நாட்கள் விடுமுறை வழங்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+