ஏஐ உலகின் முதுகெலும்பாக இருக்கும் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ-வான ஜென்சன் ஹுவாங் சீன பெண் உளவாளியுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்திருக்கும் வேளையில், மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது.
ஜென்சன் ஹுவாங் சீன உளவாளியான ஆலீஸ் ஹுவாங் உடன் மட்டும் அல்லாமல் என்விடியா நிறுவனத்தின் பெண் மூத்த நிர்வாகியுடனும் திருமணத்திற்கு மீறிய கள்ள உறவில் இருந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் ஜென்சன் ஹுவாங் மீதான குற்றச்சாட்டுக்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
என்விடியா நிறுவனத்தின் ஹெல்த்கேர் பிரிவின் துணைத் தலைவராக இருக்கும் கிம்பெர்லி பவல் உடன் தான் ஜென்சன் ஹுவாய் உறவில் இருந்துள்ளார்.

கார்ப்பரேட் உலகில் நிறுவனத்திற்குள் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருப்பது பெரும் குற்றமாகப் பார்க்கப்படுகிறது, உதாரணமாக நிர்வாக பொறுப்பில் இருப்பவர், உறவில் இருப்பவருக்காக எடுக்கப்படும் முடிவுகள் நிறுவனத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால் இது கடும் குற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கிம்பெர்லி பவல் நேரடியாக ஜென்சன் ஹுவாங்-க்கு ரிப்போர்ட் செய்யும் நிலையில் பணியாற்றியுள்ளார். நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையுடன் பேசிய 5 மூத்த என்விடியா அதிகாரிகள் இதை உறுதி செய்துள்ளனர்.
ஜென்சன் ஹுவாங் - கிம்பெர்லி பவல் மத்தியிலான கள்ள உறவு குறித்து நிறுவனத்திற்குள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மார்ச் மாதம் நடந்த என்விடியா கூட்டத்திற்குப் பின்பு ஜென்சன் ஹுவாங் - கிம்பெர்லி பவல் கலிபோர்னியா-வின் சான் ஜோசே ஹோட்டலில் நெருக்கமாக இருந்ததாகவும் என்விடியா ஊழியர்கள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்குத் தெரிவித்துள்ளனர்.
ஜென்சன் ஹுவாங் - கிம்பெர்லி பவல் இருவருக்குமான உறவு நிறுவனத்திற்குள் வெளிப்படையாகத் தெரிந்த பின்பும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது, இதேபோல் என்விடாவின் வொர்க்பிளேஸ் பாலிசி எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.
முக்கியமாக ஜென்சன் ஹுவாங்-ன் பிள்ளைகளான மேடிசன் மற்றும் ஸ்பென்சர் இருவரும் தற்போது என்விடியாவில் தான் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் என்விடியா நிர்வாகம் இனி ஆலீஸ் ஹுவாங் விவகாரத்துடன் கிம்பெர்லி பவல் விஷயத்தையும் விசாரணை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
2008ஆம் ஆண்டு என்விடியா நிறுவனத்தில் சேர்ந்த கிம்பெர்லி பவல் தப்போது ஹெல்த்கேர், உயர் கல்வி, மெடிக்கல் இமேஜிங் சாதனங்களில் பயன்படுத்தும் சப் டெக்னாலஜி பிரிவை கவனித்து வருகிறார்.
ஜென்சன் ஹுவாங்-ன் கள்ள உறவு குற்றங்கள் தற்போது என்விடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு, எதிர்காலம், ஏன் அவரின் சிஇஓ பதவி, குடும்ப வாழ்க்கையும் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications