அமெரிக்கப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் வெள்ளிக்கிழமை டவ் ஜோன்ஸ் குறியீடு சுமார் 5.50 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இது அமெரிக்கப் பங்குச் சந்தை வரலாற்றில் மிக மோசமான நாட்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. டொனால்டு டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பை நடைமுறை செய்து 2 நாளில் அமெரிக்க பங்குச்சந்தையின் சந்தை மதிப்பீடு சுமார் 5 டிரில்லியன் டாலர் வரையில் சரிந்துள்ளது. இது அமெரிக்க முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் உலகளவில் இருந்து அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்த அனைவரையும் பாதித்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பதிவான வீழ்ச்சி , கடந்த காலங்களில் பங்குச் சந்தை வரலாற்றில் மிக மோசமான நாட்களை நினைவுபடுத்துகிறது. இந்த நிலையில் எப்போது, எந்த காரணத்திற்காக வீழ்ச்சி அடைந்தது என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

1929 வால் ஸ்ட்ரீட் பேரழிவு:
கறுப்பு வியாழன் (அக்டோபர் 24, 1929): 1.29 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட்டு வீழ்ச்சி தொடங்கியது.
கறுப்பு திங்கள் (அக்டோபர் 28, 1929): டவ் ஜோன்ஸ் 12.8 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
கறுப்பு செவ்வாய் (அக்டோபர் 29, 1929): டவ் ஜோன்ஸ் 11.7 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
காரணம்: ரோரிங் டுவென்டீஸ் காலகட்டத்தில் பங்குச்சந்தை வர்த்தகத்தின் மீது சாதகமான ஊகங்கள் அதிகமாக இருந்த காரணத்தால், முதலீட்டாளர்கள் கடன் வாங்கி பங்குகள் வாங்கினர். இதேவேளையில் அமெரிக்காவில் அனைத்து துறையிலும் அதிகப்படியான உற்பத்தி மற்றும் குறைந்த ஊதியம் போன்ற பொருளாதார பலவீனமானது. இந்த வீழ்ச்சி பெரும் பொருளாதார மந்தநிலையின் தொடக்கத்தை அறிவித்தது.
கறுப்பு திங்கள் (அக்டோபர் 19, 1987):
டவ் ஜோன்ஸ் வீழ்ச்சி: -22.6 சதவீதம் வீழ்ச்சி.
காரணம்: பீதி விற்பனை, computerized trading programs பற்றிய கவலைகள், அதிகரித்து வந்த வட்டி விகிதங்கள் மற்றும் வர்த்தக பற்றாக்குறைகள் ஆகியவற்றால் உருவான ஒரு உலகளாவிய சந்தை வீழ்ச்சி இது. இந்த வீழ்ச்சி 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழக்கச் செய்தது, மேலும் டவ் ஜோன்ஸ் வரலாற்றில் ஒரு நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது.
அக்டோபர் 27, 1997:
டவ் ஜோன்ஸ் வீழ்ச்சி: 7.18 சதவீதம் வீழ்ச்சி.
காரணம்: ஆசியாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி அமெரிக்கச் சந்தைகளில் பீதி விற்பனைக்கு வழிவகுத்தது. மேலும் இழப்புகளைத் தடுக்க வர்த்தகம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது.
2008 நிதி நெருக்கடி:
செப்டம்பர் 29, 2008: டவ் ஜோன்ஸ் 6.98 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
காரணம்: லேமன் பிரதர்ஸ் நிறுவனம் திவாலானது மற்றும் 700 பில்லியன் டாலர் பிணையெடுப்புத் திட்டம் நிராகரிக்கப்பட்டது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பீதியை உருவாக்கியது. இந்த நெருக்கடி ரியல் எஸ்டேட், சப்-பிரைம் கடன்கள் மற்றும் அடமான பத்திரங்கள் போன்ற ஆபத்தான நிதி தயாரிப்புகளிலிருந்து அதிகப்படியான பாதிப்பை உருவாக்கியது.
கறுப்பு திங்கள் (ஆகஸ்ட் 8, 2011):
டவ் ஜோன்ஸ் வீழ்ச்சி: 5.55 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
காரணம்: ஸ்டாண்டர்ட் & புவர்ஸ் நிறுவனத்தால் அமெரிக்க கடன் மதிப்பீடு வரலாற்றில் முதன்முறையாகக் குறைக்கப்பட்டது, இது இரட்டை பொருளாதார மந்தநிலை மற்றும் உலகளாவிய பொருளாதார உறுதியற்ற தன்மை பற்றிய அச்சத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் தூண்டியது.
கோவிட்-19 வீழ்ச்சி (மார்ச் 16, 2020):
டவ் ஜோன்ஸ் வீழ்ச்சி: 12.9 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
காரணம்: கோவிட்-19 வைரஸ் தொற்று விரைவாக பரவியது மற்றும் லாக்டவுன் நடவடிக்கைகள் மூலம் பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் பீதி விற்பனைக்கு வழிவகுத்தது.
டிரம்ப் வரி (ஏப்ரல் 3-4, 2025):
டவ் ஜோன்ஸ் வீழ்ச்சி:
ஏப்ரல் 3: -1,490 புள்ளிகள் (-3.5 சதவீதம்) வீழ்ச்சியடைந்தது.
ஏப்ரல் 4: -1,600 புள்ளிகள் (-5.50 சதவீதம்) வீழ்ச்சியடைந்தது.
காரணம்: இறக்குமதி பொருட்களின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கடுமையான வரிகள் உலகளாவிய வர்த்தகப் போர் மற்றும் மந்தநிலை பற்றிய அச்சத்தைத் தூண்டியது. இரண்டு நாட்களில் S&P சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்தது.
இந்த வீழ்ச்சிகள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் பங்குச் சந்தைகள் இந்த வீழ்ச்சியிலிருந்து மீளக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications