இந்தியா கடந்த இரண்டு வருடமாகக் கொரோனா உடன் போராடுவது மட்டும் அல்லாமல், சீனா உடனும் எல்லையில் போராடி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு சீன நிறுவனங்களுக்கும், முதலீடுகளுக்கும் எதிராகப் பல நடவடிக்கைகள் எடுத்துள்ள நிலையில், தற்போது புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள காரணத்தால் சீன நிறுவனங்கள் உடன் தொடர்புடைய இந்திய நிறுவனங்களுக்குப் பிரச்சனை உருவாகியுள்ளது.
மத்திய அரசு கட்டுப்பாடு
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு இந்தியாவுடன் எல்லையைப் பகிரும் நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும், அரசுத் திட்டத்தில் பங்கு பெறவும் அதிகளவிலான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்தது.
இந்தக் கட்டுப்பாடுகள் முக்கியமாகச் சீன நிறுவனங்களை இந்தியச் சந்தையில் இருந்து வெளியேற்றவே போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய செலவின அமைச்சகம் தளர்வு
இந்நிலையில் ஜூன் 8ஆம் தேதி மத்திய செலவின அமைச்சகம் (Department of Expenditure) அரசுத் திட்டங்களைக் கைப்பற்றும் ஏல திட்டத்தில், இந்திய எல்லையைப் பகிரும் நாடுகளில் இருக்கும் நிறுவனங்களிடம் டிராஸ்பர் ஆப் டெக்னாலஜி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள இந்திய நிறுவனங்கள் பங்கு பெறலாம் எனத் தெரிவித்தது.
DPIIT அமைப்பு
இந்நிலையில் தற்போது மத்திய தொழிற்துறை மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டுத் துறை இந்த அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளது. ஜூன் 28ஆம் தேதி DPIIT அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சீன நிறுவனங்களுடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் விருப்ப விண்ணப்பம் தெரிவித்துள்ளதாகவும்...
பயனற்றதாக உள்ளது...
மத்திய அரசு போட்ட கட்டுப்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகவும், பயனற்றதாகவும் மத்திய செலவின அமைச்சகம் கொடுத்துள்ள அனுமதி உள்ளதாக DPIIT அமைப்பு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
டிராஸ்பர் ஆப் டெக்னாலஜி ஒப்பந்தம்
இதன் மூலம் மத்திய செலவின அமைச்சகம் கொடுத்துள்ள அனுமதி விரைவில் திரும்பப் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவது மட்டும் அல்லாமல், சீன நிறுவனங்கள் உடன் டிராஸ்பர் ஆப் டெக்னாலஜி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள இந்திய நிறுவனங்கள் அரசுத் திட்டங்களில் இருந்து வெளியேற உள்ளது.
சீனா - இந்திய நிறுவனங்கள்
இது சீன நிறுவனங்கள் மறைமுகமாக இந்தியச் சந்தைகள் வருவதை இந்தக் கட்டுப்பாட்டின் கீழ் செய்ய முடியும். இது மட்டும் அல்லாமல் இந்தக் கட்டுப்பாடு சீன நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பல இந்திய நிறுவனங்களுக்கும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications