இந்தியாவில் உள்ள பல தொழிலதிபர்கள் தங்களது தொழிலை கடுமையான உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் மிகப் பெரிய அளவுக்கு வளர்த்துள்ளனர். இதேபோல் தான் டாக்டர் கரிமா சாஹ்னி தனது வேலையை விட்டுவிட்டு சொந்தமாக பிரிஸ்டைன் கேர் என்ற ஹெல்த் கேர் நிறுவனத்தைத் தொடங்கினார். பத்தே ஆண்டுகளில் அவரது நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.11,400 கோடி ஆகும்.
2018 ஆம் ஆண்டு டாக்டர் கரிமா சாஹ்னி தனது கணவர் டாக்டர் வைபவ் தந்த ஊக்கத்தினால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பிரிஸ்டைன் கேர் கிளினிக்கை தொடங்கினார். இருவரும் சேர்ந்து பிரிஸ்டைன் கிளினிக் நெட்வொர்க்கை குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்தி இன்றைக்கு ரூ.11,400 கோடி மருத்துவ வர்த்தக சாம்ராஜ்ஜியமாக உருவாக்கியுள்ளனர்.

மருத்துவமனைகளில் காலியாக உள்ள இடங்கள், மருத்துவர்கள், கிடைக்கும் மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தான் அவர்களது திட்டமாக இருந்தது. இந்த மிகப் பெரிய திட்டத்துக்கு நிறைய முதலீடு தேவைப்பட்ட நிலையில் Sequoia Capital நிதி நிறுவனம் அந்தத் தொகையை முதலீடாக வழங்கியது.
பிரிஸ்டைன் கேர் தொடங்கிய மூன்றே ஆண்டுகளுக்குள் பிரிஸ்டைன் ஒரு யுனிகார்ன் நிறுவனமாக மாறியது. தற்போது பிரிஸ்டைன் நிறுவனத்தின் நிகர மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.11,400 கோடி.
நாட்டில் பல மருத்துவமனைகளைப் பயன்படுத்தி சிகிச்சை தரும் திட்டமானது டாக்டர் கரிமா சாஹ்னியின் மருத்துவப் பணி அனுபவம் மூலம் உதயமானது. பிரிஸ்டைன் கேர் நிறுவனத்தில் 15 லட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 800 மருத்துவமனைகளுடன் கூட்டு சேர்ந்து நடத்தப்படும் இந்த சேவை 42 நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
2024 நிதியாண்டில் பிரிஸ்டைன் கேர் ரூ.1000 கோடி வருவாயை எட்டுவதற்கு இலக்கு வைத்துள்ளது. 2022 நிதியாண்டில் இந்த நிறுவனம் ரூ.350 கோடி வருமானம் அடைந்தது. நோயாளிகளுக்கான அறுவைச் சிகிச்சைகள் மூலம் 60 சதவீத வருவாய் கிடைக்கிறது.
சராசரியாக பிரிஸ்டைன் கேர் நெட்வொர்க்கில் சராசரியாக 20 சதவீத ஆபரேஷன் தியேட்டர்கள் மற்றும் படுக்கைகள் பயனில் இருக்கும். 50க்கும் மேற்பட்ட நோய்கள் மற்றும் பைல்ஸ், ஹெர்னியா, கிட்னி கற்கள், கேட்ராக்ட், கைனகோமாடியா, அபார்ஷன் போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
பிரிஸ்டைன் கேர் நெட்வொர்க் மூலம் சிறந்த மருத்துவ சேவையைப் பெற்றதாக சிகிச்சை பெற்றவர்கள் கூறுகின்றனர். அந்த நிறுவனத்தின் வெளிப்படையான செயல்பாட்டினால் இன்ஸ்சூரன்ஸ் கிளைம்கள் மூலம் எந்தவித பிரச்னையும் இல்லாமல் உடனடியாக பணத்தை திரும்பப் பெற முடிகிறது என்றும் கூறினர்.


Click it and Unblock the Notifications