2004 முதல் 2014 வரை இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், செப்டம்பர் 26, 1932 இல் பிறந்த அவர் முதுமையின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு டிசம்பர் 26ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அரசியல்வாதி, பொருளாதார நிபுணர், கல்வியாளர் மற்றும் அரசு அதிகாரி எனப் பல முகங்களைக் கொண்ட மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றி அமைத்த பல முக்கியமான சாதனைகளைச் செய்துள்ளார்.

மன்மோகன் சிங் வெளிநாட்டில் தனது படிப்பை முடிந்துவிட்டு இந்தியா திரும்பி பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி வந்த போது, அவர் பொருளாதாரத்தில் செய்த பல்வேறு ஆய்வுகள் மூலம் அப்போதை மத்திய அரசின் பார்வைக்கு வந்தார். இதன் மூலம் 1970களில் அவருக்கு வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் பதவி கிடைத்தது. இது தான் அவருடைய அரசியல் வாழ்க்கைக்குப் பிள்ளையார் சுழியைப் போட்டது.
இதன் பின்பு 1982-1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கவர்னராக பணியாற்றினார். இதை தொடர்ந்து அடுத்த முக்கிய பதவியாக அப்போதை பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசின் நிதியமைச்சராக முதல் சீக்கிய நபர் என்ற பெருமையுடன், பொறுப்புடன் நாற்காலியில் அமர்ந்தார்.
இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் 1991-ம் ஆண்டு ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். அந்த ஆண்டு தான் இந்தியா பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதைச் செயல்படுத்தியது மறைந்த மன்மோகன் சிங்.
பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசின் புரட்சிகரமான 1991 பொருளாதார தாராளமயமாக்கல் செயல்படுத்திய முக்கிய தலைவர்களில் ஒருவராக மன்மோகன் சிங் உருவெடுத்தார். தாராளமயமாக்கல் செயல்படுத்த 1990 களில் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றார்.
1991 ஆம் ஆண்டில், இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5 சதவீதமாக இருந்தது, வெளிநாட்டில் வாங்கிய கடனை செலுத்துவதற்கு நிதி பற்றாக்குறை மிகப்பெரிதாகவும் இருந்தது. இதேவேளையில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீத அளவில் இருந்தது.
இதனால் இந்தியா எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது, அப்போது மன்மோகன் சிங் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். இதற்கு மத்தியில் இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கல் அறிமுகம் செய்து நாட்டின் பொருளாதார கதவுகளை உலக நாடுகளுக்குத் திறக்கும் நோக்கில் தாராளமயமாக்கல் கொள்கையை அறிமுகம் செய்தார்.
தாராளமயமாக்கல் அறிமுகம் செய்தது மூலம் அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருந்த பல முக்கியத் துறைகளில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் பங்கேற்க வழிவகுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரவும், பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும், நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த கொள்கை முக்கியமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
குறுகிய காலத்தில் தனியார் துறை மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் பங்களிப்பை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த இக்கொள்கை பெரிதும் பயன்பட்டது. இதன் மூலம் போட்டித்தன்மை அதிகரித்து, தரமான பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இன்று இந்தியாவின் பொருளாதாரத்தை வடிவமைத்துள்ள முக்கிய விஷயங்களில் மன்மோகன் சிங் அறிமுகம் செய்த தாராளமயமாக்கல் கொள்கை மிகவும் முக்கியமான ஒன்று என்றால் மிகையில்லை.
இந்த தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பல முக்கியத் துறைகளில் தனியார் நிறுவனங்கள் நுழைந்தன. இதன் விளைவாக, பொருளாதார வளர்ச்சி அதிகரித்தது, புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகின, வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications