ரஷ்யா, உக்ரைன் நாட்டு பிராண்டுகளை வாங்கும் டாக்டர் ரெட்டி..!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டாக்டர் ரெட்டி லேப்ஸ் தனது வர்த்தகத்தை இந்தியாவிலும் உலக நாடுகளில் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டத்துடன் க்ளென்மார்க் பார்மா நிறுவனத்தின் anti-allergy மருந்துகளைத் தயாரிக்கும் Select பிராண்டை கைப்பற்ற இரு நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனம் 1.54 சதவீதம் சரிந்து 4,826 ரூபாய்க்குச் சரிந்த நிலையில், இந்த ஒப்பந்தம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனப் பங்குகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராண்டுகள்

பிராண்டுகள்

ஹைதராபாத் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டாக்டர் ரெட்டி நிறுவனம் க்ளென்மார்க் நிறுவனத்தின் மோமட் ரினோ (ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்), மோமட் ரினோ அட்வான்ஸ் (ரஷ்யா), மோமட் ஏ (கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்), க்ளென்ஸ்பிரே மற்றும் க்ளென்ஸ்பிரே ஆக்டீவ் (உக்ரைன்) ஆகிய பிராண்டுகளின் டிரேட்மார்க், தகவல்கள், பேட்டன்ட் ஆகியவற்றைத் தத்தம் பிராந்தியங்களுக்குக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒவ்வாமை நாசியழற்சி

ஒவ்வாமை நாசியழற்சி

தற்போது டாக்டர் ரெட்டி கைப்பற்றும் க்ளென்மார்க் நிறுவனத்தின் பிராண்டுகளில் பொதுவான mometasone mono மற்றும் mometasone + azelastine ஆகிய மூலப்பொருள் மருந்தாக உள்ளது. இந்த மருந்து ஒவ்வாமை நாசியழற்சிக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

 வர்த்தக விரிவாக்கம்

வர்த்தக விரிவாக்கம்

இந்தப் பிராண்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் டாக்டர் ரெட்டி ஆகிய நாடுகளில் தனது வர்த்தகத்தை ரஷ்யா, உக்ரைன், கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் முக்கிய வர்த்தகப் பகுதியாகவும் மாற முடியும்.

க்ளென்மார்க் பார்மா

க்ளென்மார்க் பார்மா

க்ளென்மார்க் பார்மா நிறுவனம் தற்போது Ryaltris என்னும் anti-allergy மருந்தை ரஷ்யா, உக்ரைன், கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் மையமாக வைத்து உலக நாடுகள் முழுவதும் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் பிர anti-allergy மருந்து பிராண்டுகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

டாக்டர் ரெட்டி லேப்ஸ்

டாக்டர் ரெட்டி லேப்ஸ்

க்ளென்மார்க் பார்மா நிறுவனத்தின் விற்பனை திட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்த டாக்டர் ரெட்டி நிறுவனம் தனது வர்த்தகத்தை ரஷ்யா, உக்ரைன், கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் பகுதியில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய இந்தப் பிராண்டுகளின் விற்பனையைக் கைப்பற்றியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+