இந்திய பார்மா துறையில் முக்கிய முன்னேற்றமாக நாட்டின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமான Dr. Reddy's Laboratories நிறுவனம் Type 2 நீரிழிவு நோய்க்கான 'Obeda' எனும் புதிய செமக்ளுடைட் (semaglutide) மருந்தை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இது, இந்தியாவில் செமக்ளுடைட் வகை மருந்தின் முதல் ஜெனெரிக் (generic) மருந்தாகும். இந்த மருந்துக்கு Drugs Controller General of India (DCGI) மக்கள் மத்தியில் அறிமுகம் செய்ய அங்கீகாரம் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பேட்டென்ட் காலாவதி விதிமுறை
செமக்ளுடைட் மருந்தின் பேட்டென்ட் காலாவதியான அதே நாளில், இந்த புதிய தயாரிப்பை சந்தையில் கொண்டு வந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், GLP-1 receptor agonist சிகிச்சை பிரிவில், இந்திய நிறுவனமாக முதல் நாளிலேயே நுழைந்துள்ளது.
இந்த சிகிச்சை முறை, Type 2 நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முக்கிய பங்காற்றுகிறது. இதனால், இந்த மருந்தின் அறிமுகம் இந்திய சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
உலகிலேயே Type 2 நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் மூலம் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ளும் நாடான இந்தியாவுக்கு இந்த மருந்தின் அறிமுகம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மருத்துவ புரட்சி
செமக்ளுடைட் (Semaglutide) என்பது முதலில் Type 2 நீரிழிவு நோய்க்கான சிகிச்சையாக உருவாக்கப்பட்ட மருந்தாகும். இதை FDA அங்கீகரித்த பின்னர், இது "Ozempic" என்ற பெயரில் முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், மருத்துவ ஆய்வுகளில் இந்த மருந்து உடல் எடையை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் திறன் கொண்டது என்பதும் கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில், உடல் எடைக் கட்டுப்பாட்டுக்காக தனிப்பட்ட வடிவில் "Wegovy" என்ற மருந்து 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இதனால், செமக்ளுடைட் தற்போது உலகளவில் முக்கியமான weight-loss drug ஆக பார்க்கப்படுகிறது. இதை மருந்துவ துறையில் பெரும் புரட்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த சந்தையில் தற்போது Novo Nordisk மற்றும் Eli Lilly ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால், தற்போது ஜெனெரிக் (generic) மருந்துகள் சந்தையில் நுழையத் தொடங்கியுள்ளதால், எதிர்காலத்தில் விலை போட்டி (price war) அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
Obeda மருந்தின் அம்சங்கள் மற்றும் விலை
'Obeda' மருந்து 2mg மற்றும் 4mg அளவுகளில் கிடைக்கிறது. இது pre-filled disposable pen வடிவில் வழங்கப்படுகிறது. நோயாளிகள் வாரத்திற்கு ஒருமுறை உடலில் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பேனா குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு போதுமான அளவிலான மருந்தை வழங்கும். மாதத்திற்கு சுமார் ரூ.4,200 என்ற விலையில் இரு வகையில் மருத்துகளில் கிடைக்கின்றன. இந்த விலை நிலை, இந்திய மக்களுக்கு எளிதாக அணுகக்கூடியதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எச்சரிக்கை
செமக்ளுடைட் (Semaglutide) மருந்தை முதலில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த Novo Nordisk நிறுவனம் உருவாக்கியது. முதலில் Type 2 நீரிழிவு சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட இந்த மருந்து, பின்னர் உடல் எடைக் கட்டுப்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியது.
ஆனால் தற்போது அமெரிக்காவில் பல வழக்குகள் இந்த மருந்து தொர்பாக நிலுவையில் உள்ளன. மேலும், US Food and Drug Administration (FDA) அமைப்பு, இந்த மருந்தின் முக்கியமான தீவிர பக்க விளைவுகளை மறைத்ததாகக் குற்றச்சாட்டு முன்வைத்து எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இந்த வகை செமக்ளுடைட் (Semaglutide) மருந்தை பயன்படுத்தும் முன் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.
ஆய்வு முடிவுகள்
டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தனது Obeda மருந்தை சுமார் 312 நோயாளிகள் பங்கேற்ற 3ஆம் நிலை மருத்துவ ஆய்வில், முன்னணி மருந்துகளுக்கு இணையான செயல்திறனை (non-inferior efficacy) காட்டியுள்ளது. இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அளவுகளில் இதன் செயல்பாடு, மூல (innovator) மருந்துடன் ஒப்பிடத்தக்கதாக இருந்தது என தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மருந்தின் செயலில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் (API) முதல் இறுதி தயாரிப்பு வரை முழுமையாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
உலக சந்தை விரிவாக்கம்
Dr. Reddy's Laboratories நிறுவனம், இந்த ஜெனெரிக் செமக்ளுடைட் மருந்தை உலகின் பல நாடுகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான ஒவ்வொரு நாட்டின் ஒழுங்குமுறை அங்கீகாரங்களையும் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பங்குச்சந்தை நிலவரம்
இந்த அறிவிப்பின் தாக்கம் வெள்ளிக்கிழமை வர்த்தகத்திலேயே எதிரொலித்துள்ளது, இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் 1.69% உயர்ந்து ஒரு பங்கு விலை ₹1,296 ஆக முடிவடைந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தக நாளின் வர்த்தகத்தில் ₹1,289 முதல் ₹1,307.50 வரை பங்கு விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ₹1.08 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 52 வாரங்களில் அதிகபட்சமாக ₹1,379.70 மற்றும் குறைந்தபட்சமாக ₹1,020.00 பதிவாகியுள்ளது.
நிதி செயல்திறன்
2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், நிறுவனம் எதிர்பார்ப்புகளை மீறிய நிதி செயல்திறனை பதிவு செய்துள்ளது. EPS ₹14.77 ஆக இருந்தது.
இந்தியாவில் முதல் ஜெனெரிக் செமக்ளுடைட் அறிமுகம், நீரிழிவு சிகிச்சையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்டது. குறைந்த விலையில் உயர்தர சிகிச்சை கிடைப்பதால், நோயாளிகளுக்கு இது பெரிய நன்மையாக இருக்கும். அதேசமயம், Dr. Reddy's Laboratories நிறுவனத்திற்கு இது உலக சந்தையில் புதிய வாய்ப்புகளையும், அதிகப்படியான வருமானத்தையும் உருவாக்கும் முக்கிய கட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
முக்கிய எச்சரிக்கை: இந்த மருந்தை பயன்படுத்தும் முன் மருத்துவர் ஆலோசனை பெற்ற வேண்டும், ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப மருந்துவர் உடல் ஆய்வுக்கு இதை பயன்படுத்த அனுமதிப்பார்.


Click it and Unblock the Notifications