இந்தியாவின் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோவேன்சின், கோவிஷீல்டு ஆகியவற்றைத் தொடர்ந்து ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்திய மக்களுக்குப் பயன்படுத்து அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக டாக்டர் ரெட்டி லேப்ஸ் தலைமையில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ள இந்த ரஷ்ய ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அடுத்த சில நாட்களில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், டாக்டர் ரெட்டி நிர்வாகம் முதற்கட்டமாகத் தனது ஊழியர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
டாக்டர் ரெட்டி லேப்ஸ் ஊழியர்கள்
டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனத்தில் தற்போது 10,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ரஷ்ய ஸ்புட்னிக்-வி தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனம் அப்போலோ மருத்துவமனை உடன் இணைந்துள்ளது.
1,50,000 டோஸ் இறக்குமதி
மே மாத துவக்கத்தில் டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து 1,50,000 டோஸ் அடங்கிய முதல் வேக்சின் ஆர்டரை கைப்பற்றியது. மே 13ஆம் தேதி சென்டர் டிரக் லேப் ஒப்புதல் ஸ்புட்னிக்-வி வேக்சினை இந்திய மக்களுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மே 14ஆம் தேதி சாப்ட் லான்ச் முறையில் தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக டாக்டர் ரெட்டி லேப்ஸ் அறிவித்தது.
ரஷ்ய வேக்சின் முன்னோட்டம்
நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் தனது ஊழியர்களுக்கு அளிக்கப்படும் இந்த வேக்சின் நடைமுறை மூலம் அடுத்தடுத்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசியை நாடு முழுவதும் சப்ளை செய்வதற்கான முன்னோட்டமாக இருக்கும் என டாக்டர் ரெட்டி லேப்ஸ் நிறுவனத்தின் API சேவை பிரிவின் தலைவர் தீபக் சாப்ரா தெரிவித்துள்ளார்.
மே-க்குள் 5 கோடி டோஸ்
மே மாதம் இறுதிக்குள்ள ரஷ்யா டெவலப்மெண்ட் இன்வெஸ்ட்மென்ட் பன்ட் 5 கோடி டோஸ் அளவிலான தடுப்பு மருத்தை இறக்குமதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 3வது காலாண்டு துவக்கம் முதல் ஸ்புட்னிக்-வி வேக்சின் அதிகளவில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்புட்னிக் வி வேக்சின் விலை
தற்போது இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் வி வேக்சின் விலை 948 ரூபாய் மற்றும் 5 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து விற்பனை செய்யப்பட உள்ளது என ரெட்டி லேப்ஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் வேக்சின் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் காரணத்தாலும், கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தாலும் விலையைப் பார்க்காமல் மக்கள் தடுப்பூசியைப் பெற தயாராக உள்ளனர்.
ஸ்புட்னிக் வி வேக்சின் உற்பத்தி
ஸ்புட்னிக் வி வேக்சின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவிலேயே இதைத் தயாரிக்கும் வண்ணம் சுமார் 6 உற்பத்தி நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது டாக்டர் ரெட்டி லேப்ஸ். உள்நாட்டுத் தயாரிப்பில் உருவாகும் வேக்சின் பயன்பாட்டுக்கு வரும் போது இதன் விலை கட்டாயம் குறையும் எனவும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications