ஏப்ரல் மாதம் தொடங்கி விட்டாலே இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான சம்பளதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கலில் பிஸியாகி விடுவார்கள். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று Form 16 எனப்படும் படிவம் 16.
நிறுவனம் ஊழியருக்கு வழங்கக்கூடிய ஒரு படிவம் தான் இது. இந்த படிவத்தில் அந்த ஊழியரின் வருமானம், பிடித்தம் செய்யப்பட்ட வரி என அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். இந்த படிவம் 16 தான் ஒரு நிறுவனம் தனது ஊழியரிடமிருந்து பிடித்தம் செய்த வரியை வருமானவரித்துறைக்கு செலுத்தியதற்கான சாட்சி. அதே போல ஒரு ஊழியர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான மிக அடிப்படை ஆவணம் இது.

ஆனால் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் படிவம் 16 இருக்காது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து இந்தியாவில் புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதில் நாம் பாரம்பரியமாக பயன்படுத்தி வரக்கூடிய பல்வேறு படிவங்களின் பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. எனவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் இந்த பெயர் மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
புதிய வருமான வரி சட்டத்தில் படிவம் 26ஏஎஸ், படிவம் 16, படிவம் 13 ஆகியவை பெயர் மாற்றம் செய்யப்படுகின்றன. கூடிய விரைவில் இவற்றின் பெயர்களை மாற்றி அரசு அறிவிப்பு வெளியிடப் போகிறது என்கிறார் பட்டய கணக்காளர் சுரேஷ் சுரானா. மத்திய அரசு வருமான வரி இணையதளத்தில் மாற்றங்களை கொண்டு வரும் அதன் பிறகு தான் இந்த படிவங்களின் பெயர்களை மாற்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு அறிவிப்பு வெளியிடும் என்கிறார்.
புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் அரசு இந்த படிவங்களின் பெயர்களை மாற்றுவது தொடர்பான அறிவிப்புகளை விரிவாக வெளியிடும் என தெரிவிக்கிறார். படிவம் 16 படிவம் 130 ஆக மாற்றப்படுகிறது என அவர் கூறியிருக்கிறார். புதிய வருமான வரி சட்டம் நாம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை மேலும் எளிதாக்கும் வகையில் இருக்கும் என தெரிவிக்கும் அவர் வருமான வரி செலுத்துபவர்கள் புதிய வருமான வரி சட்டம் தொடர்பான அறிவிப்புகளை உன்னிப்பாக கவனித்து புதிய மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது என கூறுகிறார்.
தற்போதைக்கு எந்த ஒரு மாற்றமும் உடனடியாக வரவில்லை, ஆனால் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு பிறகு தான் அரசு இந்த படிவங்களின் பெயர்களை மாற்றி அமைக்க இருக்கிறத. அது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களையும் அரசு வழங்கும் என்பதால் இந்த மாற்றங்கள் குறித்து கவலை கொள்ள தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications