தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் டிராகன் பட பாணியில் ஆள்மாறாட்டம் செய்து இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்றது தற்போது தெரியவந்துள்ளது .
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நாயகனாக வரும் பிரதீப் ரங்கநாதன் மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்காக ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்வார். அவருக்கு பதிலாக வேறொரு தேர்வு எழுதுவது, வேறு ஒருவர் நேர்காணலில் பங்கேற்பது என கதையில் காட்டப்பட்டிருக்கும். அதே பாணியில் தெலுங்கானாவை சேர்ந்த ஒரு இளைஞர் இன்போசிஸ் நிறுவனத்தில் நேர்காணலுக்கு வேறு ஒருவரை பங்கேற்கச் செய்து விட்டு மோசடி செய்திருப்பது அவர் வேலைக்கு சேர்ந்த 15 நாட்களிலேயே அம்பலம் ஆகிவிட்டது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரப்பா சாய் பிரசாந்த் என்பவர் 20 வயதானவர். இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைக்காக இவர் விண்ணப்பம் செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு விர்ச்சுவல் முறையில் வேலைக்கான நேர்காணல் நடைபெற்றிருக்கிறது. அதில் தனக்கு பதிலாக தன்னுடைய நண்பரை பங்கேற்கச் செய்து செய்திருக்கிறார். அவர் வேலை செய்த 15 நாட்களிலேயே இந்த மோசடி கண்டறியப்பட்டு தற்போது அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வு செய்து வழங்கக்கூடிய சாம்ரதா சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் இது தொடர்பாக தெலுங்கானா மாநில காவல் துறையிடம் புகார் பதிவு செய்துள்ளது. அதில் பிரசாந்த், சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்காக விண்ணப்பம் செய்ததாகவும் அவருடைய ஆவணங்களை சரிபார்த்த பிறகு விர்ச்சுவல் முறையில் அவருக்கு நேர்காணல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அந்த நேர்காணலை தொடர்ந்து ஜனவரி மாதம் 20ஆம் தேதி அவருக்கு வேலையில் சேர்வதற்கான ஆஃபர் லெட்டர் வழங்கப்பட்டதாம்.
அவரும் குறித்த தேதியில் வேலைக்கு சேர்ந்து விட்டார். ஆனார் அவரால் நேர்காணலில் செயல்பட்டது போல வேலையில் திறம்பட செயல்பட முடியவில்லை . கல்வி ரீதியாக அவர் சிறந்த அறிவை பெற்றிருந்தாலும் ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு மேற்கொள்வது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்திருக்கிறது. ஆனால் விர்ச்சுவல் நேர்காணலில் அவர் மிகத் தெளிவாக சரளமாக ஆங்கிலத்தில் பேசி இருக்கிறார். இதனால் அங்கிருந்த மேலாளருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து அந்த விர்ச்சுவல் நேர்காணலில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களையும் அவருடைய புகைப்படத்தையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்து பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் பிரசாந்த் தனக்கு பதிலாக வேறு ஒருவரை நேர்காணலில் பங்கேற்ற செய்தது கண்டறியப்பட்டது. அவர் தற்போது வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் அவர் மீது தெலுங்கானா மாநில காவல் துறையினர் மோசடி ,ஆள்மாறாட்டம் உன்னிடம் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications