தமிழ் திரைப்பட உலகில் ஒவ்வொரு காலத்திலும் புதிய நட்சத்திரங்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். சமீபத்தில் வெளிவந்த 'டிராகன்' படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் கயாது லோஹர். தனது அழகும், திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது தமிழிலும் தெலுங்கிலும் புகழின் உச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறார்.
கயாது லோஹர், வடஇந்திய மாநிலமான அசாமின் தேஸ்பூர் நகரில் பிறந்தவர். திரைப்பட உலகில் புகழ்பெறுவதற்கு முன்பு, அவர் ஒரு மாடலாக செயல்பட்டார். தனது அழகால் பலரையும் கவர்ந்த அவர், 'எவ்ரித் ஃப்ரெஷ் ஃபேஸ்' சீசன் 12 என்ற போட்டியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவருக்கு திரைப்படத்துறையில் நுழைய வாய்ப்பாக அமைந்தது.

கல்வியில் ஆர்வமுள்ள கயாது, கணக்கியல் மற்றும் வணிக நிர்வாகம் தொடர்பான பாடங்களை படித்து பி.காம் பட்டம் பெற்றுள்ளார். எனினும், அவர் தனது உண்மையான விருப்பம் திரைத்துறையிலேயே என்பதை உணர்ந்து, அத்துறையில் தனக்கென ஒரு இடம் பிடிக்க கடுமையாக உழைத்தார். மாடலிங் உலகில் வெற்றிபெற்ற பிறகு, கயாது தனது நடிப்புத் திறனை மேம்படுத்த முயன்றார். அவர் முதன்முதலில் 2021ஆம் ஆண்டு வெளிவந்த 'முகில்பெட்டே' என்ற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பிறகு, மலையாளத்தில் 'பத்தோன்பதாம் நூற்றாண்டு' என்ற வரலாற்று திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்தார். இந்தப் படம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு திரையுலகிலும் அவர் தடம் பதிக்க விரும்பி 'அல்லூரி' என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
கயாது லோஹரின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் 'டிராகன்'. பிரபல தமிழ் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த இந்தப் படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ஜார்ஜ் மரியன், கே.எஸ். ரவிக்குமார், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோருடன் கயாது முக்கிய வேடத்தில் நடித்தார்.
'டிராகன்' ஒரு இளைஞனின் வாழ்க்கையைப் பற்றிய நகைச்சுவை கலந்த நெகிழ்ச்சியான படம். இதில் கதாநாயகனின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களும், அவன் எடுக்கும் தவறான முடிவுகளும், அதன் விளைவுகளும் சுவாரஸ்யமாகச் சொல்லப்படுகின்றன.
படத்தின் வெற்றியும், கயாது லோஹரின் பாராட்டும் 'டிராகன்' வெளியானவுடன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் படம் பார்க்க திரையரங்குகளுக்கு வந்தனர். படம் வெளியான முதல் மூன்று நாட்களில் மட்டுமே ரூபாய் 50.22 கோடி ரூபாய் வசூலித்தது.தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வருவாய் ஈட்டியதை உறுதிப்படுத்தினார். இதில் தமிழ்நாடு ரூ. 24.9 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரூ. 6.25 கோடி, கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியா ரூ. 4.37 கோடி, மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் ரூ. 14.7 கோடி வசூலித்தது.
படத்தின் வெற்றியால் கயாது லோஹர் ரசிகர்களின் கண்களில் படர் ஒளியாக மாறினார். அவர் தமிழ் திரையுலகில் அதிக கவனம் பெற்ற நடிகையாக உருவாக, பல புதிய வாய்ப்புகள் அவரை நோக்கி வந்தன.
கயாது லோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து ஒரு காணொளி பகிர்ந்தார். அதில் அவர் கூறியதாவது, "நான் தமிழ்ப் பெண் இல்லை. எனக்கு தமிழ் மொழி நன்றாகப் பேசத் தெரியாது. ஆனால், உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி. எதிர்காலத்தில் நல்ல படங்களில் நடித்து உங்கள் ஆதரவுக்கு பதிலளிக்க விரும்புகிறேன்."
'டிராகன்' படத்தின் வெற்றிக்கு பிறகு, கயாது லோஹர் தனது அடுத்த தமிழ் காதல் திரைப்படமான 'இதயம் முரளி'-ல் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை ஆகாஷ் பாஸ்கரன் இயக்க, டான் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். இதில் அதர்வா, பிரீத்தி முகுந்தன், நட்டி சுப்பிரமணியம், நிஹாரிகா என்எம், தமன் எஸ், ரக்ஷன், பிரக்யா நக்ரா மற்றும் சுதாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகையாக கயாது மாறியுள்ளார். அவருடைய நடிப்பு, அழகு மற்றும் தனித்துவமான கவர்ச்சி காரணமாக, பல இயக்குநர்கள் அவருடன் பணியாற்ற ஆர்வம் காட்டுகிறார்கள். தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடிக்க, தமிழ் திரையுலகில் ஒரு பெரிய நட்சத்திரமாக உயரும் கயாது லோஹரின் பயணம் சுவாரஸ்யமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications