ஹிப்-ஹாப் பாடகர்களில் ஒருவரான டிரேக் என்பவர், தனது இசை திறமை மட்டுமின்றி, சூதாட்டத்திலும் கைத்தேர்ந்தவர் என்பதை அண்மையில் நிரூபித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடுமையாக மோதின. இந்த போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றது. டிரேக் இதன் மூலம் பந்தயம் கட்டி சுமார் ரூ. 7 கோடி ரூபாய் பணத்தை வென்றுள்ளார்.
கால்பந்து மற்றும் NFL உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகளில் பெரும் தொகைக்கு பந்தயம் கட்டுவதில் பெயர் பெற்ற டிரேக், தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பையின் மூலம் பணத்தை அள்ளி குவித்துள்ளார். சமீபத்திய இந்தியா vs பாகிஸ்தான் T20 உலகக் கோப்பையில் ரூ. 5 கோடியை இந்தியா வெற்றி பெறும் என்று கூறி பந்தயம் கட்டினார். பந்தயத்தை வென்ற பிறகு, அவர் கோடிக்கணக்கான ரூபாய்களைப் தற்போது பெற்றுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இந்த T20 உலகக் கோப்பை போட்டி பரபரப்பாகவும், பதட்டமாகவும் இருந்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 19 ஓவர்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக, பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அபார பௌலிங் திறமையால் போட்டியின் திசையே மாறியது. பும்ரா 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், பாண்டியா 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் விளைவாக, இந்திய அணி வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி டிரேக்கிற்கு மகத்தான பண மழையைக் கொண்டு வந்தது. இங்கிலாந்து நாட்டு பத்திரிக்கையான மிரர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டிரேக் சுமார் £715,000 (தோராயமாக ரூ.7.58 கோடி) பணத்தை வென்றுள்ளார். இதில் £204,000 (சுமார் ரூ.2.16 கோடி) லாபமாக அவர் பெற்றுள்ளார். இது டிரேக் வைத்த பல சூதாட்டங்களில் வென்ற ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு மும்பு டிரேக், இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் பந்தயம் கட்டி ரூ.3.73 கோடி வென்றதாக கூறப்படுகிறது. Mashable India அறிக்கையின்படி, டிரேக் ஷாருக்கானின் அணியில் $250,000 பந்தயம் கட்டினார், பந்தயத்தின் மூலம் ரூ 1.7 கோடி லாபம் பெற்றார்.


Click it and Unblock the Notifications