டிராய் உத்தரவை அடுத்து ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கான வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் ரீசார்ஜ் பிளான்களின் விலையை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் டேட்டா மற்றும் கால் இரண்டுமே இருக்கும் வகையில் காம்போ ரீசார்ஜ் திட்டங்களை மட்டுமே அளித்து வந்தன. அதாவது, நம்மில் பலர் டேட்டாவை பயன்படுத்தாமல் சேவையை பயன்படுத்தி வந்தனர். இதனால் டேட்டாவிற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாகப் பலரும் புகார் அளித்த நிலையில், டிராய் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையான டிராய் சமீபத்தில் மேஜர் வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது. அதாவது டேட்டா மற்றும் வாய்ஸ் கால் இரண்டும் ஒன்றாக உள்ளபடி மட்டும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கக்கூடாது என்றும் தனித்தனி ரீசார்ஜ் பேக்குகளை டெலிகாம் நிறுவனங்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அதாவது, இரண்டிற்கும் ரீசார்ஜ் செய்யாமல், எது தேவையோ அதற்கு மட்டும் ரீசார் செய்தால் போதும் என்றும், டேட்டா விரும்பாதோருக்கு அதற்கான கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அறிவித்தது. அதன்படி, ஏர்டெல் நிறுவனம் இப்போது வாய்ஸ் காலுக்கு மட்டும் தனியாகவும் டேட்டாவுக்கு தனியாகவும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்திருந்தது. இந்தநிலையில், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கல் தற்போது வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ்க்கான ரீசார்ஜ் திட்டங்களை திருத்தி, குறைந்த விலையில் அறிவித்துள்ளன.
அந்த வகையில், ஜியோவில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு மட்டும் ரூ.1,748 என்ற விலையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் செல்லுபடியாகும் நாட்கள் 336 நாட்கள் ஆகும். அதாவது இது முந்தைய திட்டத்துடன் ஒப்பிடுகையில் 29 நாட்கள் குறைவான வேலிட்டி கொண்டதாகும். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 3,600 SMS மற்றும் வாய்ஸ் காலை உள்ளடக்கியுள்ளது. மற்றொரு பெரிய திட்டமான ரூ.458-யில் இருந்து ரூ.448 ஆகக் குறைத்துள்ளது. இதில், தொடர்ந்து 1000 எஸ்எம்எஸ்களுடன், அன் லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிட்டி கொண்டுள்ளது.
இதேபோல், ஏர்டெல் நிறுவனமும், வாய்ஸ் கால் மற்றும் எஸ் எம் எஸ் ரீசார்ஜ் திட்டங்களில் விலை குறைப்பை செய்துள்ளது. அதன்படி, ரூ. 1,959 ஆக இருந்த வருடாந்திரத் திட்டம் (365 நாட்கள் வேலிட்டி), தற்போது ரூ. 1,849 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதிலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 3,600 எஸ்எம்எஸ் சேவைகளை பெறலாம். மேலும், 84 நாட்களுக்கான வேலிட்டி திட்டத்தில் ரூ. 499 விலையில் இருந்து, தற்போது ரூ. 469 ஆக குறைக்கப்பட்டு, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 900 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications