இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்கள் சம்பளம் கொடுக்கும் ஒரு காரணத்தாலேயே, ஊழியர்கள் நிறுவனத்திற்கும், முதலாளிகளுக்கும் உரியவர் என்ற எண்ணம் நிலவுகிறது. இதனாலேயே பலர் வேண்டுமென்ற ஊழியர்களை அதிக நேரம் வேலை செய்ய வைப்பது, விடுமுறை அளிக்காமல் வேலை செய்ய வைப்பது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது.
இதைவிட முக்கியமாகக் கார்பரேட் நிறுவனங்கள் பெரும்பாலானவற்றில் ஊழியர்கள் அதிக நேரம் பணியாற்றுவது வழக்கமான ஒன்று ஆனால் எத்தனை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஓவர்டைம் சம்பளம் கொடுக்கிறது. இப்படிப் பல ஊழியர் தொடர்பான பிரச்சனைகள் கார்பரேட் துறையில் கேட்கப்படாமலேயே உள்ளது.
இந்த நிலையில் ஒரு நிறுவனம் தானாக முன் வந்து ஊழியர்கள் நலனில் முக்கியத்துவம் செலுத்தி தரமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கார்ப்பரேட் கலாச்சாரம்
இந்திய கார்ப்பரேட் கலாச்சாரத்தில், வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேலை தொடர்பான போன் கால், மெசேஜ் மற்றும் மின்னஞ்சல்களைப் பெறுவது என்பது விசித்திரமான விஷயம் ஏதுமில்லை. உண்மையில் இது ஊழியர்களை எரிச்சலூட்டினாலும் வேறு வழியே இல்லாமல் ஊழியர்கள் அதற்கான பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
விடுமுறை நாட்கள்
இந்த நிலையில் விடுமுறை நாட்களில் பணி தொடர்பான எந்தத் தகவலையும் ஊழியர்களுக்கு அனுப்பக் கூடாது. அப்படி அனுப்பினால் அந்தந்த ஊழியர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் பெயர் ட்ரீம் 11.
மெசேஜ், மெயில்
Dream 11 நிறுவனம் தனது ஊழியர்களுக்காக ஒரு புதிய கொள்கையைக் கொண்டு வந்துள்ளது, இது ஊழியர்கள் விடுப்பில் இருக்கும் போது அல்லது விடுமுறை நாட்களில் அவர்களைத் தொடர்பு கொள்வதைத் தடை செய்கிறது. இந்தப் புதிய கொள்கை மூலம் அதன் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல், Slack மெசேஜ் அல்லது WhatApp அரட்டை அனுப்புவதைக் கூட இப்புதிய கொள்கை மூலம் தடை செய்துள்ளது.
UNPLUG பாலிசி
ஊழியர்களின் விடுமுறை நாட்களில் அடிக்கடி பணி தொடர்பான அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மெயில்கள் வருவதால் தங்களுக்கான நேரத்தை அனுபவிக்க முடியாது அல்லது ஓய்வெடுக்க முடியாது என்று Dream 11 நிறுவனம் கூறியது. இதைத் தடுக்க, நிறுவனம் UNPLUG என்ற கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.
டிரீம் 11 நிறுவனம்
UNPLUG பாலிசியின் கீழ், விடுமுறையில் இருக்கும் ஊழியர்களை உண்மையாகவே விடுமுறையில் இருக்க வைக்கும் வகையில் உறுதி செய்துள்ளது.ஊழியர்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் புத்துணர்ச்சியுடன் தங்கள் பர்சனல் நேரத்தை அனுபவிக்க டிரீம் 11 நிறுவனம் விரும்புகிறது.
1 லட்சம் ரூபாய் அபராதம்
மேலும் UNPLUG பாலிசியின் கீழ் எந்தவொரு பணியாளரும் பணி தொடர்பான எந்த ஒரு கேள்விக்கும் பணியாளரைத் தொடர்பு கொண்டால், அவர்/அவள் 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் விதிமுறை மூத்த நிர்வாகம் உட்பட அனைவருக்கும் பொருந்தும் எனவும் டிரீம் 11 நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகள்
மேற்கத்திய நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் ஊழியர்கள் நலன் மற்றும் பணி சூழலை பெரிய அளவில் மேம்படுத்தி வைத்திருக்கும் நிலையில், இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்கள் நலனில் அக்கறை செலுத்துவது இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்பது அனைத்துத் தரப்பின் கோரிக்கையாக உள்ளது. உங்கள் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சூப்பரான சலுகை என்னவென்று மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications