மத்திய அரசு ஆன்லைன் மனி கேம்களை தடை செய்வதற்காக மசோதாவை ஒப்புதல் செய்துள்ள வேளையில், இந்தியாவில் மினி கேம்கள் அனைத்தும் மக்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் அனைத்து மினி கேம்கள் நிறுவன பங்குகளும் பெரும் சரிந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான பேச்சுவார்த்தையை ட்ரீம்11 நிறுவனம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) தொடங்கியுள்ளது. இது ரூ.358 கோடி மதிப்பிலான ஒப்பந்தமாகும்.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை போட்டிக்கு முன்பாக இந்த ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதால் டிரீம்11 பிசிசிஐ உடன் விரைவான முறையில் பேச்சுவார்த்தையை துவங்க உள்ளது.
மத்திய அரசின் புதிய சட்டத்தால் பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளையும், பேண்டசி ஸ்போர்ட்ஸ் கேம்களையும் தடை செய்யப்பட்டது மட்டும் அல்லாமல், இதை விளம்பரப்படுத்தவோ, ஸ்பான்சர் செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளது டிரீம்11
2023ஆம் ஆண்டு பிசிசிஐயுடன் மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ட்ரீம்11, இந்தப் புதிய சட்டக் கட்டமைப்பின் கீழ் ஸ்பான்சர்ஷிப்பைத் தொடர்வது சாத்தியமில்லை. இந்தச் சட்டம் ஆன்லைன் கேமிங் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ - டிரீம்11 மத்தியிலான ஒப்பந்தம் மிகவும் கண்டிப்பான விதிமுறைகள் உடன் இருக்கும் காரணத்தால், ஒருதலைப்பட்சமாக முடிவு செய்யப்பட்டு இந்த ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது. பிசிசிஐயுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இரு தரப்புகளும் இணங்கிய பின்பே விலக முடியும்.
ட்ரீம்11 இந்திய கிரிக்கெட் அணிக்கான மிகப்பெரிய விளம்பரதாராக உள்ளது, இப்படி பல இடத்திலும், பிரிவிலும் விளம்பரம் செய்யும் காரணத்தால் இந்தியாவின் மிகப்பெரிய விளம்பரதாரர்களில் ஒன்றாக உள்ளது. அதன் தாய் நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸ், 2023 நிதியாண்டில் விளம்பரத்திற்காக சுமார் ரூ.2,964 கோடி செலவிட்டது, இது முந்தைய ஆண்டைவிட 37 சதவீதம் அதிகம்.
இந்தியாவில் பேண்டசி கேம் தளங்கள் ஆண்டுக்கு ரூ.5,000 கோடிக்கும் அதிகமான தொகையை விளம்பரத்துக்கு செலவிடுகின்றன. இந்தத் தடையால், இத்தகைய நிறுவனங்களின் வருவாய் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படலாம். அதேபோல் விளம்பர துறையும் பாதிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications