பொசுக்குன்னு 50 மில்லியன் டாலர் முதலீடு செய்த டிரீம்11.. யாருக்கு ஜாக்பாட்..?!

இந்திய ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் டிரீம்11 இந்த ஐபிஎல் சீசனில் பெரும் தொகையை சம்பாதித்த கையோடு வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை வழங்க வேண்டும் என்பதற்காக பெரும் தொகையை முதலீடு செய்துள்ளது. டிரீம்11 நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் மற்றும் அம்பானி குடும்பத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது, எத்தனை பேருக்கு தெரியும்..?

டிரீம்11 -இன் தாய் நிறுவனமான டிரீம் ஸ்போர்ட்ஸ், கிரிக்கெட் தளமான கிரிக்பஸ் மற்றும் வட அமெரிக்க கிரிக்கெட் ஒளிபரப்பு தளமான வில்லோ டிவி ஆகியவற்றில் சுமார் 50 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முதலீடு மூலம் டிரீம்11 தளத்தில் ரசிகர்களின் ஈடுபாட்டை மேம்படுத்தவும், வணிக அனுபவங்களை விரிவாக்கவும் முடியும் என தெரிகிறது.

பொசுக்குன்னு 50 மில்லியன் டாலர் முதலீடு செய்த டிரீம்11.. யாருக்கு ஜாக்பாட்..?!
x

டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனம், வில்லோ டிவி-யை 2014லும் Cricbuzz-ஐ 2016-லும் கையகப்படுத்தியது. தற்போது டிரீம் ஸ்போர்ட்ஸ் இந்த நிறுவனத்தில் 50 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யும் நிலையில் சிறிய அளவிலான பங்குகளை பெற உள்ளது. வில்லோ மற்றும் Cricbuzz ஏற்கனவே 185 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவையை அளித்து வருகிறது.

இந்த முதலீட்டு மூலம் டிரீம் ஸ்போர்ட்ஸ், டைம்ஸ் இன்டர்நெட் உடன் இணைந்து, இந்த தளங்கள் ரியல் டைம் அனலிசிஸ், செயற்கை நுண்ணறிவு கணிப்புகள் மற்றும் பர்சனலைஸ்டு அனுபவங்களை வழங்க திட்டமிட்டுள்ளன.

இந்த முதலீடு, இந்திய விளையாட்டு தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்லை எட்டுவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த கூட்டு முயற்சி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேம்பட்ட அனுபவங்களை வழங்குவதற்கு உதவும் என்று டிரீம் ஸ்போர்ட்ஸ், டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வில்லோ டிவி, அமெரிக்கா மற்றும் கனடாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்தும் போட்டிகளை 2027 வரை ஒளிபரப்பும் உரிமைகளை 2023 மார்ச் மாதம் பெற்றது. இந்த ஒப்பந்தம், ஆண்கள், பெண்கள், மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பைகள் உட்பட 14 சர்வதேச போட்டிகளை உள்ளடக்கியது. ஆண்டுக்கு 1,500-க்கும் மேற்பட்ட லைவ் பேட்களை ஒளிபரப்பும் வில்லோ டிவி, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் தனது சேவைகளை விரிவாக்கியுள்ளது. இது, உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கிய தளமாக உள்ளது.

கிரிக்பஸ் மற்றும் வில்லோ டிவி, டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தின் கீழ் இயங்கி, மாதந்தோறும் 150 நாடுகளில் 185 மில்லியன் ரசிகர்களுக்கு ஸ்கோர்கள், மேட்ச் அனலிசிஸ், ஹைலைட்ஸ், மற்றும் நேரலை மேட்ச் பார்க்கும் சேவையை வழங்குகின்றன. டிரீம் ஸ்போர்ட்ஸின் முதலீடு, இந்த தளங்களின் தொழில்நுட்ப திறனை மேலும் மேம்படுத்தி, ரசிகர் அனுபவத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

டிரீம் ஸ்போர்ட்ஸ், டிரீம்11 உடன், ஃபேன்கோட் (ஸ்போர்ட்ஸ் கன்டென்ட் மற்றும் வணிக தளம்), டிரீம்செட்கோ (ஸ்போர்ட்ஸ் எக்ஸ்பிரீயன்ஸ்), டிரீம் கேம் ஸ்டுடியோஸ் (மொபைல் கேம் டெவலப்மென்ட்), மற்றும் சிக்ஸர் (விளையாட்டு அடிப்படையிலான விர்ச்சுவல் டிரேடிங் தளம்) ஆகியவற்றை உள்ளடக்கியது.

250 மில்லியன் பயனர்களைக் கொண்ட இந்த நிறுவனம், விளையாட்டு தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ளது. 2021 நவம்பரில் 840 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை திரட்டிய இந்நிறுவனம், 8 பில்லியன் டாலர் அளவுக்கு மதிப்பீட்டை அப்போது பெற்றது.

டிரீம் ஸ்போர்ட்ஸ் சமீபத்தில் அதாவது 2025 மார்ச் மாதம், தனது தலைமையகத்தை அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்திலிருந்து இந்தியாவிற்கு மாற்றியது. இந்த முடிவை எடுக்க முக்கியமான காரணம் ஐபிஓ கனவு.

இந்தியாவில் செயல்படும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடும் நோக்கத்தில் தாய்நாட்டிற்கு திரும்பும் போக்கை பின்பற்றுகிறது. இந்தியாவில் தனது தளத்தை வலுப்படுத்துவதன் மூலம், டிரீம் ஸ்போர்ட்ஸ் உள்நாட்டு விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப சந்தையில் மேலும் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது.

2008-ல் ஜெயின் மற்றும் பவித் ஷெத் ஆகியோரால் நிறுவப்பட்ட டிரீம் ஸ்போர்ட்ஸ், இந்தியாவின் விளையாட்டு தொழில்நுட்பத் துறையில் முன்னோடியாக உள்ளது.

டிரீம்11 நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் தந்தை தான் ஆனந்த் ஜெயின். முகேஷ் அம்பானியும், ஆனந்த் ஜெயினும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள், திருபாய் அம்பானியின் வளர்ச்சி காலக்கட்டத்தில் முகேஷ் அம்பானி உடன் இணைந்து பணியாற்றியது மட்டும் அல்லாமல் இக்குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறினார்.

இதனால் பலரும் ஆனந்த் ஜெயினை திருபாய் அம்பானியின் 3வது மகனாகவும் அழைக்கப்பட்டார், 2007 போர்ப்ஸ்-ன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருந்தார். இன்றளவும் ஆனந்த் ஜெயின் முகேஷ் அம்பானியின் முக்கிய நண்பர்களில் ஒருவராக உள்ளது. இதேபோல் முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீடு இருக்கும் அதே தெருவில் ஆனந்த் ஜெயின், ஹர்ஷ் ஜெயின் வசித்து வகுகின்றனர்.

FAQs
டிரீம் ஸ்போர்ட்ஸ் ஏன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியது?

டிரீம் ஸ்போர்ட்ஸ், 2025 மார்ச் மாதம், தனது தலைமையகத்தை டெலாவேரிலிருந்து இந்தியாவிற்கு மாற்றியது, முக்கியமாக IPO வெளியிடும் நோக்கத்திற்காக. இந்தியாவில் தனது தளத்தை வலுப்படுத்துவதன் மூலம், உள்நாட்டு விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப சந்தையில் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது, பல இந்திய ஸ்டார்ட்அப்களின் போக்கைப் பின்பற்றி.

வில்லோ டிவி மற்றும் கிரிக்பஸ் எவ்வாறு கிரிக்கெட் ரசிகர்களுக்கு சேவை செய்கின்றன?

வில்லோ டிவி, 2027 வரை அமெரிக்கா மற்றும் கனடாவில் ICC போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை வைத்துள்ளது, ஆண்டுக்கு 1,500+ லைவ் மேட்ச் வழங்குகிறது. கிரிக்பஸ் மற்றும் வில்லோ டிவி, 150 நாடுகளில் 185 மில்லியன் ரசிகர்களுக்கு ஸ்கோர்கள், மேட்ச் அனலிசிஸ், மற்றும் லைவ் மேட்ச்களை வழங்குகின்றன.

டிரீம்11 நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் மற்றும் அம்பானி குடும்பத்திற்கு என்ன தொடர்பு?

டிரீம்11 நிறுவர் ஹர்ஷ் ஜெயினின் தந்தை ஆனந்த் ஜெயின், முகேஷ் அம்பானியின் நெருங்கிய நண்பர் மற்றும் திருபாய் அம்பானியுடன் பணியாற்றியவர். ஆனந்த் ஜெயின், 2007-ல் போர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்தார். முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டிற்கு அருகிலேயே ஹர்ஷ் ஜெயின் குடும்பம் வசிக்கிறது.

டிரீம்11-இன் $50 மில்லியன் முதலீடு கிரிக்பஸ் மற்றும் வில்லோ டிவியை எப்படி மாற்றும்?

டிரீம் ஸ்போர்ட்ஸ், கிரிக்பஸ் மற்றும் வில்லோ டிவியில் $50 மில்லியன் முதலீடு செய்து, ரசிகர்களுக்கு நிகழ்நேர பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு கணிப்புகள், மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை வழங்க திட்டமிடுகிறது. இந்த முதலீடு, 185 மில்லியன் ரசிகர்களுக்கு மேம்பட்ட கிரிக்கெட் அனுபவத்தை வழங்குவதுடன், வணிக ஒருங்கிணைப்புகளை மேம்படுத்தும்.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+