தங்கம் கடத்துவதற்காக 27 முறை துபாய் பயணம் செய்த ரன்யா ராவ்! ஒரு DGP மகளே இப்படி பண்ணலாமா?

துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படும் வழக்கில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இவர் எந்தெந்த ஊர்களுக்கு எல்லாம் பயணம் செய்தார் என்ற விவரங்கள் குறித்து வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டறிந்துள்ளது. இதுவரையில் ரன்யா துபாய்க்கு 27 முறை பயணம் சென்றிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதுவரையில் 45-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ரன்யா ராவ் பயணம் செய்துள்ளார். சமீபத்தில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். இதுவரை இவர் 14.8 கிலோ தங்கத்தை கடத்தியதற்காக பிடிபட்டுள்ளார்.

தங்கம் கடத்துவதற்காக 27 முறை துபாய் பயணம் செய்த ரன்யா ராவ்! ஒரு DGP மகளே இப்படி பண்ணலாமா?

கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூருவை சேர்ந்தவர் ரன்யா ராவ். இவருக்கு வயது 32. இவர் கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் திங்கட்கிழமை அன்று நள்ளிரவு துபாயிலிருந்து வந்த போது பெங்களூரு விமான நிலையத்தில் 14.8 கிலோ தங்க நகையுடன் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகளிடம் சிக்கினார்.

இதனையடுத்து அவருடைய அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரின் லாவெல் சாலையில் உள்ள அவருடைய லக்ஸரி அப்பார்ட்மெண்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2.1 கோடி மதிப்புள்ள டிசைனர் தங்க ஆபரணங்களும், ரூ. 2.7 கோடி ரொக்கமும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் இந்த வழக்கில் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ. 17.3 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த நகைகள் ஒரு முக்கிய அரசியல்வாதியின் வழிகாட்டுதலின் கீழ் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரிகள் எந்த பெயர்களையும் வெளியிடவில்லை. ரன்யா ராவ் வைத்திருந்த நகைகள் அனைத்தும் நகரத்தில் உள்ள ஒரு உயர்ரக கடையிலிருந்து வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தான் அதிகாரிகள் அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளனர். திங்கட்கிழமை இரவு 7 மணி அளவில் எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அங்கு காத்திருந்தனர். விமானம் தரை இரங்கியதும் ரன்யா தனது உடலில் பெல்ட் வடிவில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகளுடன் பிடிபட்டார். அப்போதே அவர் சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 18-ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

ரன்யா ராவின் வழக்கறிஞர் குழு ஜாமீன் கோரியது. ஆனாலும் தங்கம் எங்கிருந்து வந்தது, மற்றும் ரன்யாவிற்கு பெரிய கடத்தல் குழுவுடன் தொடர்பு உள்ளதா போன்ற விவரங்களை விசாரிக்க வேண்டி இருப்பதால் அவருடைய ஜாமினை எதிர்த்துள்ளது. இந்த வழக்கு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. ரன்யாவிற்கு யார் ஆதரவாக இருக்கின்றனர்?, பெரிய கடத்தல் கும்பலுடன் இணைந்து இருக்கிறாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+