DJI நிறுவனத்தை ஓட ஓட விரட்டப்போகும் இந்தியா.. விஸ்வரூப வளர்ச்சி..!!

சென்னை: ட்ரோன் என்றாலே நம் நினைவுக்கு வருவது DJI நிறுவனம் தான், இத்துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் உலகளவில் யாரும் நெருங்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது. ஒளிப்பதிவு, விவசாயம், ஜியோ சென்சிங், தொழிற்துறை என பல பிரிவுகளுக்கு மிகவும் பயனுள்ள டிரோன்களை உயர்தர தொழில்நுட்ப வசதிகள் உடன் தயாரித்து வருகிறது.

டிஜேஐ ஆதிக்கத்தை உடைக்கும் வகையில் தற்போது இந்தியா ட்ரோன் தொழில்நுட்பத்திற்கான முக்கிய தளமாக உருவாகி வருகிறது. பிரிட்டன் மற்றும் சீனாவை விட இந்தியாவில் புதிய ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. இதன் மூலம் அடுத்த சில வருடத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தில் சீனாவுக்கு போட்டியாக இந்தியா உருவெடுக்க அனைத்து விதமான வாய்ப்புகளும் உள்ளது.

DJI நிறுவனத்தை ஓட ஓட விரட்டப்போகும் இந்தியா.. விஸ்வரூப வளர்ச்சி..!!

இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி 2021 ஆம் ஆண்டு தொடங்கியது. 2021 காலக்கட்டத்தில் தான் இந்திய அரசு, ட்ரோன் விதிகளை தளர்த்தி, பதிவு தொடர்பான விதிமுறைகளை ரத்து செய்து சில உரிமம் தேவையை நீக்கியது.

ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனங்களை கண்காணிக்கும் தரவு தளமான Tracxn திரட்டியுள்ள தகவல்களின் ஆகஸ்ட் 2024 நிலவரப்படி, இந்தியாவில் 398 ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான விதிகள் நடைமுறையில் இருந்த போது 157 நிறுவனங்களை ஒப்பிடும் போது தற்போது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உருவெடுத்துள்ளது.

ஆகஸ்ட் நிலவரப்படி சீனாவில் 298 நிறுவனங்கள் இருந்தன. மூன்று ஆண்டுகளுக்கு முன் இது 204 ஆக இருந்தது. பிரிட்டன் டிரோன் துறையில் 2021 ஆகஸ்டில் 192 ஆக இருந்ததில் இருந்து 298 நிறுவனங்களாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி வேகமாக இருந்தாலும், அதன் முன்னணி நிறுவனங்கள் நிதி திரட்டும் அளவில் பின்தங்கியுள்ளன. இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இந்த மாதம் பெற்ற சராசரி முதலீடு 19.4 மில்லியன் டாலராகும். இது 2021 இல் 5.1 மில்லியன் டாலரை ஒப்பிடும் போது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும்.

ஆனால் சீனாவுக்கு உண்மையான போட்டியாளராக இருக்கப்போவது அமெரிக்கா தான், காரணம் அமெரிக்காவில் தற்போது 1366 ட்ரோன் நிறுவனங்கள் உள்ளது. இதேபோல் முதலீட்டு அளவும் அதிகமாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+