மத்திய பிரதேசம்: 15 வயதில் பள்ளி கட்டணத்தை செலுத்துவதற்காக விவசாயத்தில் இறங்கிய ஒரு மாணவன் தற்போது 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் உரிமையாளராக மாறியிருக்கிறார்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் அன்ஸ் பதீடர். இவர் பத்தாம் வகுப்பு தேர்வில் 91 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருந்தார். அவருக்கு இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என விருப்பம் இருந்தது ஆனால் அந்த சமயத்தில் அவருடைய தந்தை விவசாயத்தில் கடும் நஷ்டம் அடைந்திருப்பதாக கூறியிருக்கிறார். இதன் காரணமாக அன்ஸால் 11ஆம் வகுப்புக்கான பள்ளி கட்டணத்தை கூட செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

குடும்பத்தை நிதி ரீதியாக நிலை நிறுத்த வேண்டும் என முடிவெடுத்த அவர் தன்னுடைய 11 ஆம் வகுப்பு படிப்புக்காக தந்தையுடன் இணைந்து வேளாண் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது அவருக்கு தங்களுடைய விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளை வாங்குவதற்கு வேறொரு நகரத்தில் இருக்கும் கடைகளுக்கு செல்ல வேண்டியதும், உற்பத்தியாளர்கள் ஏஜென்ட்கள் என பலரும் பெருமளவு லாபம் வைத்து அவற்றை விற்பனை செய்கின்றனர் என்பதையும் கண்டறிந்தார்.
அப்போதே அவருக்கு உள்ளூர் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் பூச்சிக்கொல்லி பொருட்களை தயாரித்து வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. அந்த சமயத்தில் அவரிடம் இருந்தது மூன்றாயிரம் ரூபாய் தான். அதை மூலதனமாக வைத்துக் கொண்டு இணையதளம் வாயிலாக பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்களை தேடி அவர்களை கண்டுபிடித்து பேசி இருக்கிறார் . குஜராத்தை சேர்ந்த ஒரு உற்பத்தியாளர் ஒப்புதல் தெரிவிக்கவே, அன்ஸ் 2019 ஆம் ஆண்டு ABC Agrocham என்ற நிறுவனத்தை தொடங்கினார். நேரடியாக உற்பத்தியாளிடமிருந்து உயர் தரம் கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திருக்கிறார்.
ஒன்றரை ஆண்டுகளிலேயே இவருடைய நிறுவனம் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியிருந்தது. இதன் மூலம் இந்தியாவில் 15 வயதிலேயே தன் பெயரில் சொந்தமாக ஜிஎஸ்டி பதிவு கொண்ட ஒரு நபராக இவர் மாறினார். அத்துடன் தன்னுடைய படிப்பையும் அவர் கைவிடவில்லை . ஒருபுறம் படிப்பு ஒருபுறம் சுய தொழில் என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது தான் நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்துடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. டிரோன் தொழில்நுட்பம், நிலத்திற்கும் பயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காத இயற்கை உயிரி பூச்சிக்கொல்லி தயாரிப்பு ஆகியவற்றை கற்றுக் கொண்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்ரிவா ஆர்கானிக் (Agriwa Organics) என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட உயிரி பூச்சிக்கொல்லிகளை தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறார் . மகசூல் அதிகரித்து இருக்கிறது ,பயிர்கள் சத்தானதாக இருக்கின்றன என்பதால் பலரும் இவரிடம் விருப்பப்பட்டு பூச்சிகொல்லிகளை வாங்கி செல்கிறார்களாம். அது மட்டும் இன்றி தன்னுடைய நிறுவனத்தில் இலவசமாக ட்ரோன் தொழில்நுட்பத்தையும் கொண்டு வந்திருக்கிறார்.
விவசாயிகள் இவரிடம் வந்து பூச்சிக்கொல்லிக்கான பணத்தை கொடுத்தாலே போதும் இவர் தன்னுடைய டிரோனை கொண்டு சென்று டிரோன் மூலம் பூச்சிகொல்லியை நிலத்தில் தெளித்துவிடுவார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் விவசாயிகள் இவருடைய இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். தற்போது அக்ரிவா ஆர்கானிக் நிறுவனத்தின் மதிப்பு 50 கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது என அவர் தெரிவிக்கிறார். தன்னுடைய நிறுவனத்தில் டிரோன்களை இயக்குவதற்கு பெண்களை பணிக்கு அமர்த்த போவதாகவும் இதன் மூலம் தங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்கள் மேம்பாடு அடைவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் .
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications