இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் கார்களின் தரம் குறித்த கேள்வி நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், மத்திய அரசு சாலை போக்குவரத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும், கார்களின் பாதுகாப்பை உயர்த்தும் வகையிலும் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் புதிய மாடல் கார்கள் அனைத்திலும் இனி கட்டாயம் டூயல் ஏர்பேக் கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அப்போ பழைய மாடல் கார்களுக்கு..?
டூயல் ஏர்பேக் கட்டாயம்
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஏப்ரல் 1, 2021 முதல் அறிமுகம் செய்யப்படும் புதிய மாடல் கார்கள் அனைத்திலும் டூயல் ஏர்பேக் அதாவது காரை இயக்குபவருக்கும், முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபருக்கும் கட்டாயம் ஏர்பேக் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
பழைய கார்களுக்கு ஆகஸ்ட் 31 வரை
இதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பழைய மாடல் கார்கள் அனைத்திற்கு ஆகஸ்ட் 31, 2021ல் இருந்து டூயல் ஏர்பேக் பொருத்தப்பட்ட பின்பு விற்பனை செய்ய அனுமதி கொடுத்துள்ளது.
கார் விலை உயரும்
இந்த அறிவிப்பின் எதிரொலியாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் விலை 5,000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரையில் சராசரியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாள் வரையிலும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு டிரைவர் சீட்டில் மட்டுமே ஏர்பேக் கட்டாயமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சாலை விபத்தில் பாதுகாப்பு
சாலை விபத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் உடன் இருப்பவர்களைக் காப்பாற்றுவதில் ஏர்பேக் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. 2019 ஜூலை முதல் டிரைவர் இருக்கையில் ஏர்பேக் கட்டாயம் பொருத்த வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2 வருட இடைவேளையில் கோ பேசஞ்சர்-க்கும் ஏர் பேக் கட்டாயமாக்க மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications