மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் காரணமாக துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக ஹோட்டல்களில் புக்கிங் பெரிய அளவில் குறைந்து அறைகள் காலியாக உள்ளன. துபாய், அபுதாபி நகங்களில் ஹாஸ்பிடாலிட்டி துறை மிகவும் முக்கியமானது என்பதால் இத்துறையை வீழ்ச்சி அடைய விட கூடாது என்பதற்காக முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
போர் சூழ்ந்துள்ள வேளையில் வெளிநாட்டு பயணிகளை இந்த ஹோட்டல்கள் எதிர்பார்க்க முடியாது, இதனால் உள்ளூர் மக்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி சலுகைகளுடன் ஹாலிடே பேக்கேஜ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான ஹோட்டல்கள் தங்கள் அறைகளை நிரப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இது சுற்றுலா துறையில் ஏற்பட்டுள்ள தற்காலிக சரிவை சமாளிக்கும் முயற்சியாகும்.

சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ள நிலையில், துபாய் போன்ற முக்கிய சுற்றுலா நகரங்களில் சில ஹோட்டல்களின் ரூம் ஆக்குபன்சி (Occupancy) வெறும் 2% வரை குறைந்துள்ளதாக ஹோட்டல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலைமை காரணமாக சில ஹோட்டல்கள் பணியாளர்களின் சம்பளத்தை குறைக்கும் நடவடிக்கைகளையும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக சுற்றுலா சீசன்களில் ஆயிரக்கணக்கான திர்ஹம் விலையில் கிடைக்கும் லக்சுரி ஹோட்டல் அறைகள் தற்போது மிகவும் குறைந்த விலையில் ஆன்லைன் முன்பதிவு தளங்களில் பட்டியலிடப்படுகின்றன.
புதிய சலுகைகள்
சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால், UAE முழுவதும் உள்ள ஹோட்டல்கள் தற்போது உள்ளூர் மக்களை வாடிக்கையாளராக மாற்றும் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. குறிப்பாக ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேக்கேஜ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சலுகைகளில் உணவு மற்றும் பானங்களுக்கான கிரெடிட், ஸ்பா வவுச்சர்கள், குழந்தைகளுக்கு இலவச தங்கும் வசதி போன்ற பல்வேறு கூடுதல் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
துபாய் DIFC Four Seasons ஹோட்டல்
துபாய் இன்டர்நேஷனல் ஃபைனான்ஷியல் சென்டர் (DIFC) பகுதியில் உள்ள Four Seasons ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு AED 650 மதிப்புள்ள உணவு மற்றும் ஸ்பா சேவைகளுக்கான கிரெடிட் வழங்குகிறது.
இதே பகுதியில் தான் ஈரான் ட்ரோன் தாக்குதலின் காரணமாக ஒரு அலுவலக கட்டிடம் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற ஹோட்டல்கள்
ராஸ் அல் கைமாவில் உள்ள Sofitel Al Hamra Beach Resort அந்நாச்சு குடிமக்களுக்கு 4 மணி நேரம் வரை லேட் செக்-அவுட் வசதி, செல்லப்பிராணி கட்டணத்தில் 50% தள்ளுபடி மற்றும் ஸ்பா மற்றும் உணவக சேவைகளில் 20% தள்ளுபடி வழங்குகிறது.
அதேபோல் Marriott Resort Palm Jumeirah Dubai தினமும் AED 500 மதிப்புள்ள ரிசார்ட் கிரெடிட், இலவச கயாக்கிங் மற்றும் பாடில் போர்டிங் போன்ற சலுகைகளையும் வழங்குகிறது. 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக தங்கவும் உணவருந்தவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
பெரிய அளவில் தள்ளுபடி
அந்நாட்டு ஹோட்டல் துறை நிபுணர்கள் தெரிவித்த தகவலின்படி, சில அல்ட்ரா லக்சுரி ஹோட்டல்கள் 50% வரை தள்ளுபடி வழங்குகின்றன. அதே சமயம் பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் 72% வரை விலைக் குறைப்பை அறிவித்துள்ளன.
Hyatt நிறுவனத்தின் Andaz Dubai The Palm ஹோட்டலில் வழக்கமாக AED 1600 இருக்கும் அறை விலை தற்போது AED 450 வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் AED 450 மதிப்பில் உணவு மற்றும் வெல்நஸ் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இரவு இலவச தங்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
போராட்டம்
விளைகுடா பகுதியில் மிக முக்கியமான வர்த்ககமாக இருப்பது ஹாஸ்பிடாலிட்டி மற்றும் விமான போக்குவரத்து, ஈரான் ட்ரோன் தாக்குதல் மூலம் இவ்விரண்டும் தற்போது கடுமையான பாதிக்கப்பட்டு வரும் காரணத்தால் இதை நம்பியிருக்கும் பல லட்சம் ஊழியர்களின் சம்பளம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருக்கும் மக்களின் வாழ்க்கை பெரும் போராட்ட களமாக மாறியுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications