மத்திய கிழக்கு நாடுகளில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்த வண்ணம் இருக்கிறது. அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ராணுவம் துபாய், பஹ்ரைன் என பல்வேறு நாடுகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
மார்ச் 1ஆம் தேதி அன்று ஈரான் படைகள், துபாய் சர்வதேச விமான நிலையம் மீதே தாக்குதல் நடத்தியது. இதனால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒவ்வொரு நொடியும் உயிருக்கு அஞ்சி இருப்பதாக கூறினர். பிரபல வீராங்கனை பி.வி. சிந்து கூட விமான நிலையத்தில் சிக்கி இருப்பதாக பதிவு வெளியிட்டார். இந்நிலையில் அவர் பத்திரமாக நாடு திரும்பினார்.

இதற்கிடையே வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் துபாய் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கக்கூடிய ஏராளமானவர்கள் எப்படியாவது தாயகம் திரும்பிவிட வேண்டும் என எண்ணுகின்றனர். ஆனால் போர் காரணமாக இந்த பிராந்தியத்தில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்கள் மட்டுமே நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் துபாயில் இருக்கக்கூடிய வெளிநாட்டவர்களுக்கு துபாய் விமான நிலைய நிர்வாகம் மிக முக்கியமான ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறது. அதாவது பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு புறப்பட்டு வந்து விட வேண்டாம் என அதில் தெரிவித்து இருக்கிறது. நீங்கள் பயணம் செய்யக்கூடிய விமான நிறுவனம் விமானம் புறப்படுவது உறுதி எனக் கூறினால் மட்டுமே விமான நிலையத்திற்கு வருகை தாருங்கள் இல்லை என்றால் வரவேண்டாம் என தெரிவித்துள்ளது.

அதாவது உங்களுடைய விமானம் புறப்படுவது உறுதியானால் மட்டுமே விமான நிலையத்திற்கு வாருங்கள் என கூறி இருக்கிறது. இந்நிலையில் ஏர் இந்தியா , ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட சில எண்ணிக்கையிலான விமானங்களை மட்டுமே துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயக்கத் தொடங்கி இருக்கின்றன. எனவே பயணிகள் தங்களுடைய விமானம் புறப்படுகிறதா அல்லது ரத்தாகி இருக்கிறதா என்ற தகவலை அறிந்த பிறகு விமான நிலையத்திற்கு புறப்பட வேண்டும் என துபாய் விமான நிலைய நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட சில நிறுவனங்கள் பகுதியளவு விமான சேவையை தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான விமான நிறுவனங்கள் மார்ச் 4ஆம் தேதி வரை விமானங்களை இயக்கப் போவதில்லை என அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன. போர் பதற்றம் நீடிப்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ பொது தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பதற்றமான போர் சூழலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயித் அல் நயான் நேற்று இரவு 9 மணி அளவில் துபாய் மாலுக்கு வருகை தந்திருந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரான் தாக்குதலுக்கு மத்தியிலும் துபாய் பாதுகாப்பாக இருக்கிறது, மக்கள் வழக்கம் போல தங்கள் பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அவரது மால் பயணம் அமைந்திருப்பதாக மக்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை: விமான டிக்கெட் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications