Dubai-ல இவங்கள மிஞ்ச யாருமில்லை.. ரூ4000 கோடி அரண்மனை, 700 கார்! சொத்து மதிப்ப கேட்டா தலை சுத்தும்!

அரசு குடும்பம்னா பெரிய பெரிய மாட மாளிகைகள்.. விதவிதமான வாகனங்கள்னு சொகுசு வாழ்க்கை வாழ்வாங்கனு நாம கதைகளில் கேட்டிருப்போம். ஆனா இந்த குடும்பம் நிஜமாவே அதை வாழ்ந்திட்டு இருக்காங்க. அபுதாபி அரசு குடும்பமான அல் நஹ்யானின் குடும்பம் உலக பணக்காரர்கள் குடும்பங்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் ஸயத் அல் நஹ்யான். இவரது குடும்பம் தான் உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட குடும்பம். 18 சகோதரர்கள், 11 சகோதரிகள், 9 குழந்தைகள், 18 பேரப்பிள்ளைகள் என மொத்தம் 56 பேர் இந்த குடும்பத்தில் உள்ளனர்.

Dubai-ல இவங்கள மிஞ்ச யாருமில்லை.. ரூ4000 கோடி அரண்மனை, 700 கார்! சொத்து மதிப்ப கேட்டா தலை சுத்தும்!

பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அரண்மையில் வாழ்க்கை, வித விதமான ஜெட்கள் என இவர்களின் சொத்து மதிப்பையும் சொகுசு வாழ்க்கையையும் கேட்டால் நமக்கு தலையே சுற்றிவிடும்.

ரூ.4,000 கோடிக்கு அரண்மனை: அல் நஹ்யான் அரசு குடும்பத்தினர் வசிக்கும் அரண்மனையை பார்த்தால் சொர்க்கம் போல காட்சி தருகிறது. 93 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. இதற்காக 4000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர்.

இங்கே 3 லட்சம் கிறிஸ்டல்கள் பொருத்தப்பட்ட அறை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள பல்வேறு வரலாற்று பொருட்களை கொண்டு அரண்மனையை அலங்கரித்துள்ளனர்.

வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்: அல் நஹ்யான் அரசு குடும்பத்தினருக்கு சொந்தமாக 700 கார்கள் உள்ளன. குறிப்பாக உலகின் மிகப்பெரிய SUV கார்கள் இவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல வித விதமான சொகுசு விமானங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. உலகிலேயே அதிக மதிப்பு கொண்ட சூப்பர் கப்பல்களில் டாப் 10இல் 3 கப்பல்கள் இவர்களுக்கு சொந்தமானது.

பல்வேறு துறைகளில் முதலீடுகள்: அல் நஹ்யான் அரசு குடும்பத்தினர் எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அது மட்டுமல்ல ரிஹான்னாவின் அழகு சாதனை பொருள்கள் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளனர். மேன்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் உரிமையாளரும் இந்த அரசு குடும்பம் தான்.

உலகில் உள்ள எண்ணெய் வளத்தில் 6% இவர்களுக்கு சொந்தமானது. பாரீஸ், லண்டன் உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களில் எல்லாம் இவர்களுக்கு சொத்து உள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு 305 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் பல லட்சம் கோடிகள்.

ஏற்கனவே தங்களிடம் உள்ள பணத்தை பல்வேறு துறைகளில் திட்டமிட்டு முதலீடு செய்வது,முறையான சொத்து நிர்வாகம் ஆகியவையே இவர்களின் மதிப்பு உயர காரணம் என சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+