துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதியில் முக்கிய நகரமான துபாய், உலக வர்த்தகத்திலும், சுற்றுலாவிலும் முன்னிலை வகிக்கிறது என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்தும் வகையில், மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது.
துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம், ஞாயிற்றுக்கிழமை தனது எக்ஸ் பதிவில், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையம் கட்டமைக்க 128 பில்லியன் திர்ஹம் அதாவது 2.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இந்த புதிய பணிகள் முனையம், துபாய் சர்வதேச விமான நிலையத்தை விட ஐந்து மடங்கு பெரியதாகவும், பயணிகளை கையாளும் திறன் கொண்டதாகவும் இருக்கும் எனவும் துபாய் மன்னர் அறிவித்தார்.
இந்த புதிய விமான நிலையம், 26 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும், வரும் ஆண்டுகளில் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் அல் மக்தூம் விமான நிலையத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

புதிய அல் மக்தூம் விமான நிலையத்தில் 400 டெர்மினல் கேட்கள் மற்றும் ஐந்து ஓடுதளங்கள் உடன் இருக்கும் என்று ஷேக் முகமது தெரிவித்தார். மேலும், துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனமான ஃப்ளை துபாய் ஆகியவை இந்த புதிய விமான நிலையத்தை தங்கள் மையமாகக் கொள்ளும்.
உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் துபாயுடன் இணைவதற்கான புதிய மையமாகவும் இது இருக்கும் என்று துபாய் அரசின் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் தெரிவித்தார்.
துபாய் விமான நிலையங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பவுல் கிரிஃபித்ஸ் கூறுகையில், இந்த நடவடிக்கை "உலக விமான போக்குவரத்து மையமாகத் துபாயின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது" என்று துபாய் அரசு ஊடக அலுவலகம் மூலம் தெரிவித்துள்ளார்.
துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் கூறுகையில், "எதிர்கால சந்ததியினருக்காக புதிய திட்டம் ஒன்றைக் கட்டமைத்து வருகிறோம். நம் குழந்தைகளுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் இந்த திட்டம் மூலம் தொடர்ச்சியான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் அவர் "துபாய் உலகின் விமான நிலையமாகவும், துறைமுகமாகவும், நகர மையமாகவும், புதிய உலக மையமாகவும் திகழும்" என்றும் கூறினார்.
அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம், துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் 2010 ஆம் ஆண்டில் ஒரேயொரு முனையத்துடன் திறக்கப்பட்டது. இது கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தின் போது எமிரேட்ஸின் டபுள் டெக்கர் ஏர்பஸ் A380 விமானங்களை நிறுத்தி வைக்கும் பார்க்கிங் லாட் ஆக இருந்தது.
இதை தொடர்ந்து கார்கோ விமான நிலையமாகவும், பிரைவேட் விமான நிலையமாகவும் உயர்ந்தது. இதன் பின்பு துபாய் ஏர் ஷோ நடத்தப்பட்டுப் பிரபலமானது. தற்போது இது உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கையாளும் திறன் கொண்ட விமான நிலையமாக மாற உள்ளது.
More From GoodReturns

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications