இன்றைய இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைபார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளனர். அதிக சம்பளம் கிடைக்கும், சில ஆண்டுகள் தங்கியிருந்து வேலைபார்த்தாலே போதும் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து செட்டிலாகி விடலாம் என்ற எண்ணமே இதற்கு காரணம்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு நகரான துபாயில் இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். 60 ஆண்டுகளுக்கு முன் வெறும் பாலைவனமாக இருந்த துபாய் இன்று ஒரு பெரிய வர்த்தக மையமாக மாறிவிட்டது.

நாள் தோறும் நம் நாட்டிலிருந்து பலர் வேலைக்காக துபாய் செல்கின்றனர். துபாயில் வேலை பார்த்தால் மாதம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்ற கேள்வி பலருக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக சில நிறுவனங்கள் சில புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளன.
கிளாஸ்ஸ்டோர் வலைதளத்தின் அறிக்கைகளின்படி, துபாயில் பணிபுரியும் தொழிலாளர்கள் மாத சம்பளமாக சுமார் 2 ஆயிரம் திர்ஹாம்கள் வாங்குவார்கள். இது நம்ம நாட்டு மதிப்பு சுமார் ரூ.45 ஆயிரம்.

அதேசமயம் வேஜ்சென்டரின் அறிக்கையின்படி, துபாயில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் சராசரி மாத சம்பளம் 600 முதல் 3 ஆயிரம் திர்ஹாம் வரை இருக்கும், நமது ரூபாய் மதிப்பில் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.68 ஆயிரம் வரை.
அதேவேளையில், துபாயில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் வெயிட்டராக வேலை பார்த்தால் மாதத்துக்கு ரூ.2.26 லட்சம் (10,070 திர்ஹாம்) சம்பளம் பெறலாம். துபாயில் ஒரு பல் மருத்துவர் மாதந்தோறும் ரூ.8.86 லட்சம் (39,120 திர்ஹாம்) சம்பாதிக்கிறார். சர்வதேச மனித வளங்களின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு நபரின் சராசரி சம்பளம் 16,500 திர்ஹாம் அதாவது சுமார் ரூ.3.74 லட்சம்.


Click it and Unblock the Notifications