விமான பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் விமான போக்குவரத்து துறை பல்வேறு விதிகளை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் துபாய்க்கு செல்லும் விமானப் பயணிகளுக்காக புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக பயணிகள் தங்களுக்கு அத்தியாவசியமான மருந்துகள், மாத்திரைகளை தங்களது கைப்பையில் எடுத்துச் செல்லலாம். ஆனால் இனி துபாய்க்கு செல்லும் பயணிகள் அப்படிச் செய்ய முடியாது. பயணிகள் அனைத்து வகை மருந்துகளையும் எடுத்துச் செல்ல முடியாது.

பல நேரங்களில் பயணிகள் தாங்கள் அறியாமல் இது போன்று தடை செய்யப்பட்ட மருந்துகளை எடுத்துச் சென்று விடுகின்றனர். இதனால் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகி விடுகின்றனர். எனவே துபாய் போன்ற ஐககிய அரபு அமீரக நாட்டுக்கு செல்லும் போது எந்த பொருள்களை எடுத்துச் செல்லலாம் எந்தப் பொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
தடை செய்யப்பட்ட பொருட்கள்-
கொக்கேய்ன், ஹெராய்ன், பாப்பின் விதைகள், போதை தரும் வஸ்துகள்.
வெற்றிலை மற்றும் சில மூலிகைகள்.
யானை தந்தம், காண்டாமிருகம் கொம்புகள், சூதாட்ட கருவிகள், மூன்று மடிப்பு வலைகள், தடைசெய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பொருட்கள்.
அச்சிடப்பட்ட பொருட்கள், ஆயில் பெயிண்டிங், புகைப்படங்கள், புத்தகங்கள், கல் சிற்பங்கள்.
போலி ரூபாய் நோட்டுகள், வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகள், அசைவ உணவுகள்.
தடை செய்யப்பட்ட பொருட்களை பயணிகள் கொண்டு சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சில பொருட்களை கட்டணம் செலுத்தி கொண்டு போகலாம். அவை-
செடிகள், உரங்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், புத்தகங்கள், அழகுப் பொருட்கள், வயர்லெஸ் கருவிகள், மது பானங்கள், இ-சிகரெட்.
தடை செய்யப்பட்ட மருந்துகள்-
பீட்டாமெத்தோடல்
ஆல்பா மெத்தில்பீனானில்
கானபீஸ்,
கோடோக்ஸிம்
ஃபென்டானில்
பாப்பி ஸ்ட்ரா கான்சென்ட்ரேட்
மெத்தாடோன்
ஓபியம்
ஆக்ஸிகோடோன்
டிரைமெபெரிடின்
பீனோபெரிடின்
கேதினோன்
கோடினைன்
ஆம்பெடமைன்
எனவே ஐக்கிய அரபு அமீரக நாடுகளான துபாய், ஷார்ஜா, பாஹ்ரைன் போன்ற நாடுகளுக்குச் செல்பவர்கள் இந்த விதியை நினைவில் வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். கட்டணம் செலுத்தி கொண்டு செல்லும் பொருட்களை முன்கூட்டியே பணம் செலுத்தி எடுத்து சொல்லுங்கள் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications