இது என்ன துபாய்க்கு வந்த சோதனை.. இந்தியாவை விட துபாயில் பெட்ரோல், டீசல் விலை அதிகம்..!!

பொதுவாக இந்தியாவை விட துபாயில் தான் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை குறைவாக இருக்கும். ஆனால் அரிய நிகழ்வாக துபாயை விட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக உள்ளது.

உலகிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான துபாயில், இந்தியாவை விட எரிபொருள் விலை உயர்ந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை பெஞ்ச்மார்க் விலைகளுக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்படுகின்றன.

இது என்ன துபாய்க்கு வந்த சோதனை.. இந்தியாவை விட துபாயில் பெட்ரோல், டீசல் விலை அதிகம்..!!

உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் உடனுக்குடன் நுகர்வோர் மீது நேரடியாக சுமத்தப்படுகின்றன. இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் அங்கு பெட்ரோல் விலை சுமார் 16% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

துபாயில் Super 98 பெட்ரோல் விலை செப்டம்பரில் 3.80 திர்ஹம்ஸ் (ரூ.98.04) ஆக இருந்தது, அக்டோபரில் 4.40 (ரூ.113.52) திர்ஹம்ஸ் ஆக உள்ளது. அதே போல Special 95 பெட்ரோல் விலை செப்டம்பரில் 3.69 (ரூ.95.20) திர்ஹம்ஸ் ஆக இருந்தது, அக்டோபரில் 4.28 (ரூ. 110.42) திர்ஹம்ஸ் ஆனது. டீசல் விலை செப்டம்பரில் 4.30 (ரூ.110.94) திர்ஹம்ஸ் ஆக இருந்தது, அக்டோபரில் 4.80 (ரூ.123.84) திர்ஹம்ஸ் என உயர்ந்துள்ளது.

Also Read

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள், அமெரிக்க டாலர் நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, சுத்திகரிப்பு மற்றும் விநியோக செலவுகள், டீலர் கமிஷன்கள் மற்றும் மத்திய - மாநில வரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 107.76 ரூபாய் தான், டீசல் விலை 99.55 ரூபாய். இந்தியாவிலேயே சண்டிகரில் பெட்ரோல் விலை 101.54 ரூபாய் தான், டீசல் விலை 89.47 ரூபாய் தான். இந்தியா பெரும்பாலான கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாலும், பெட்ரோல் தயாரிக்கும் நாட்டை விட குறைந்ததாக உள்ளது.

Recommended For You

ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையை கடுமையாக பாதித்துள்ளன. கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டுள்ளது. பல்வேறு எண்ணெய் கட்டமைப்புகள் போரால் சேதமடைந்துள்ளன. மேலும் தொடரும் சண்டை மற்றும் கடல்வழி போக்குவரத்து பாதைகளில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் 9 மாதங்களாக சிக்கல் நீடிக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தவில்லை ஏனெனில் இது எரிபொருள் விலை உயர்வானது பல பொருட்களின் விலையை உயர்த்தும். இது பொதுமக்களின் மாதாந்திர வீட்டு் செலவுகளை பெரிதும் பாதிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+