சில நேரங்களில் சிலருடைய வினோதமான செயல்கள் பலராலும் பிரமித்து பார்க்கப்படும். அதேபோல ஒரு செயலை தான் தற்போது துபாய் இளவரசியும் செய்துள்ளார். துபாயின் இளவரசியும், துபாய் ஆட்சியாளர் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகளுமான ஷேக்கா மஹ்ரா அல் மக்தூம், "Divorce" என்ற புதிய பர்ஃபியூம்மை வெளியிட உள்ளார். அவரது மஹ்ரா எம்1 பிராண்டில் கூடுதலாக தற்போது இந்த புதிய வாசனை திரவியம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தப் பெயருக்கு பின்னால் இருக்கும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஷேக்கா மஹ்ரா தனது கணவரிடமிருந்து பிரிவதை வெளியிட்ட பிறகு இப்படி ஒரு புதிய பர்ஃபியூமை வெளியிட உள்ளார். இது உலக அளவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாயின் அரச குடும்பத்தைச் சேர்ந்த 30 வயதான மஹ்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக வெளியிடப்படும் பர்ஃப்யூமின் டீசர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் "Divorce" என்ற வார்த்தை பிளாக் கலர் பர்ஃப்யூம் பாட்டிலின் மேல் புறத்தில் பொறிக்கப்பட்டிருப்பது நன்றாக தெரிகிறது. ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்ற எமிராட்டி தொழிலதிபரிடமிருந்து அவருடைய விவாகரத்தை குறிக்கும் சின்னமும் இடம்பெற்றுள்ளது.

மேலும் நேற்றைக்கு முந்தைய நாள் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் உடைந்த கண்ணாடி, கருப்பு நிற ரோஜா இதழ்கள் மற்றும் கருப்பு சிறுத்தை போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. ஜூலை மாதம் 2024-ஆம் ஆண்டில் ஷேக்கா மஹ்ரா தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தனது விவாகரத்து குறித்த செய்தியை வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு சில வாரங்களில் இந்த "Divorce" என்ற புதிய பர்ஃபியூமின் டீசரை வெளியிடவுள்ளார்.
"அன்புள்ள கணவரே! நீங்கள் மற்றவர்களுடன் பிஸியாக இருப்பதால் நான் இந்த விவாகரத்தை அறிவிக்கிறேன். "I divorce you" என்று இஸ்லாமிய நடைமுறையான முத்தலாக் முறையை பயன்படுத்தி எழுதியிருந்தார். அதன் பிறகு இந்த பதிவு வைரலானது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்த 2 மாதங்களிலேயே இந்த விவாகரத்தை அறிவித்தனர்.
தற்போது ஷேக்கா மஹ்ரா இந்த புதிய பர்ஃப்யூமை அவருடைய மஹ்ராய் M1 பிராண்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளார். இந்த பிராண்டின் மூலம் ஆடம்பர பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்த துபாய் இளவரசி தற்போது இன்ஸ்டாகிராமில் 9.8 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பவர்களை வைத்துள்ளார். அவரது வாழ்க்கை மற்றும் வணிகம் முயற்சிகளை இதில் அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.
$14 முதல் $18 பில்லியன் வரை மதிப்பிடப்பட்ட நிகரச் சொத்து மதிப்புடன், உலகின் பணக்கார அரச குடும்பங்களில் ஒருவரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் 26 குழந்தைகளில் இவரும் ஒருவர்.


Click it and Unblock the Notifications