துபாயில் தனியார் டியூஷன் ஆசிரியராக உள்ள 25 வயதானவர், பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு வீட்டில் சென்று டியூஷன் எடுத்து வருகிறார். இதில் ஒரு சிறுமிக்கு வீட்டுப்பாடத்தை செய்து தருவதற்காக ரூ.2.25 லட்சம் ஃபீஸாக அளிக்கப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள செல்வந்தர்கள் தங்களது பிள்ளைகளின் படிப்புக்காக எந்தளவுக்கும் செலவு செய்யத் தயாராக இருப்பதாக அந்த ஆசிரியர் கூறினார்.

தனது மாணவர்களில் ஒருவர் தனது சகோதரியிடம் இனி நீ வீட்டுப்பாடம் செய்யும் கவலையை விட்டுவிடு. அதற்கு தந்தை ஒரு வழியைச் செய்வார் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அந்த மாணவியின் வீட்டுப்பாடத்தை செய்வதற்காக ஆசிரியருக்கு ரூ.2.25 லட்சத்தை மாணவியின் தந்தை அளித்துள்ளார். இதெல்லாம் துபாயில் ரொம்பவே சகஜம் என்று அந்த ஆசிரியர் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு குடிபெயர்ந்த அந்த ஆசிரியர் அங்குள்ள ஒரு சர்வதேச டியூஷன் ஏஜென்சியில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு படிக்கும் மில்லியனர்களின் பிள்ளைகளுக்கு அவர் பாடம் சொல்லிக் கொடுத்தார்.
எனது மாணவர்களில் ஒருவரது வீடு துபாயில் மிகவும் காஸ்ட்லியான பகுதியில் உள்ளது. வீட்டில் ஓவியம் வரைய ஒரு அறை, மசாஜ் ரூம், ஜிம், சினிமா தியேட்டர் உள்ளன. அந்த வீடு ஐந்து மாடிக் கட்டடமாகும்.
வீட்டு ஓனர் 10 வேலையாட்களுக்கு மேல் அமர்த்தியுள்ளார்.
பெற்றோர்கள் எப்போதும் தங்கள் பிள்ளைகளுக்கு அருகில் இருப்பதில்லையென்றாலும், அவர்களை சந்திக்கும் போது, அவர்கள் எப்பொழுதும் தன்னுடன் நட்பாகவே இருந்தார்கள் என்றும் அவர் கூறினார்.
அவரது பெரும்பாலான தகவல்தொடர்புகள் குழந்தைகளின் ஆயாக்கள் மூலமாகவே இருந்தன.
அவர்கள் எனக்கு இரவு உணவு சமைத்து பானங்கள் கொண்டு வருவார்கள். நான் ஒரு பெரிய சகோதரனைப் போல குடும்பத்தின் ஒரு அங்கமாக உணர்ந்தேன் என்று ஆசிரியர் கூறினார்.
இந்த பெரும் பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் தனது பல தனித்துவமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், அப்போது சுமார் ஏழு வயதுடைய தனது மாணவர்களில் ஒருவர், உயிரியல் பாடத்தில் ஆந்தையைப் பற்றி படிக்கும் போது நிஜத்தில் ஆந்தையைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அடுத்தநாள் பார்த்தால் அவரது வீட்டில் ஒரு அறையில் ஒரு ஆந்தை அமர்ந்திருந்தது என்று அவர் கூறினார்.
அவரது மாணவர்களில் ஒருவர், ஒரு நாள், கலை மற்றும் கிராப்ட் பயிற்சியை முடித்த பிறகு தரையில் இறைந்து கிடந்த குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சொன்னபோது, குழந்தை ஆயாவை சுட்டிக்காட்டி இதற்குத் தான் அவருக்கு சம்பளம் தரப்படுகிறது என்று கூறினார். இப்படி இருக்கிறது அவர்களது வாழ்க்கை முறை.
Story written by: I.jayachandran


Click it and Unblock the Notifications