துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில் 2025-ல் வெளிநாட்டு வாங்குபவர்களில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அனாராக் ப்ராப்பர்ட்டி கன்சல்டண்ட்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியர்கள் ₹85,000 கோடி முதல் ₹95,000 கோடி வரை மதிப்புள்ள வீடுகளை வாங்கியுள்ளனர்.
இது 2023-ஐ விட மிகப்பெரிய அளவிலான உயர்வாகும். 2023-ல் இந்தியர்களின் பங்கு 12 சதவீதமாக இருந்தது, இப்போது 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. துபாய் முழு ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் கடந்த ஆண்டு 250 பில்லியன் டாலர் (சுமார் ₹23 லட்சம் கோடி) அளவுக்கு இருந்தன.
ஆனால் ஈரான் போருக்கு பின்பு புவிசார் பதற்றங்கள் அதிகரித்த காரணத்தால் ஒட்டுமொத்த துபாய் ரியல் எஸ்டேட் துறையும் மாறியுள்ளது.

இந்தியர்களின் பங்கு ஏன் உயர்ந்தது?
இந்தியர்கள் துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளனர். அரபு அல்லாத வெளிநாட்டு வாங்குபவர்களில் இங்கிலாந்து மற்றும் சீன முதலீட்டாளர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். துபாய் உலகளாவிய நிதி மையமாக உள்ளது. இந்நாட்டில் முதலீட்டு கொள்கைகள் நெகிழ்வாக இருப்பது மட்டும் அல்லாமல் பெரும் பணக்காரர்களின் முக்கிய முதலீட்டு தளமாக இருந்து வருகிறது. குறிப்பாக பில்லியனர்கள் அவர்களின் குடும்ப அலுவலகத்தை துபாயில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் பெரும் பணக்காரர்களை தாண்டி பிடித்த முக்கிய பதவிகளில் இருக்கும் இந்தியர்களையும் துபாய்-க்கு வேலைக்காக அதிகளவில் வருகின்றனர், ஒருக்காலத்தில் ப்ளூ காலர் வேலைவாய்ப்புக்கு பெயர்போன துபாய் தற்போது கார்ப்ரேட், அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்புகளுக்கு முக்கிய இடமாக மாறி வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு இணையாக முதலீட்டு வாய்ப்பும், வேலைவாய்ப்பும் துபாயில் கிடைக்கும் காரணத்தால் இந்திய முதலீட்டாளர்களை ஈர்க்கிறது. துபாயில் வீடு வாங்குவது பாதுகாப்பான முதலீடாகவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வழியாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியர்களின் முதலீடு பெருமளவு உயர்ந்துள்ளது. இப்படியிருக்கையில் இந்தியர்களின் முக்கிய முதலீடாக ரியல் எஸ்டேட் உள்ளது.
போர் பதற்றம்
இந்த நிலையில் துபாய் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் மத்தியில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் ரியல் எஸ்டேட் சந்தையை பாதிக்கிறதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. குறிப்பாக ஆஃப்-பிளான் (கட்டுமானத்தில் உள்ள) திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் கவலையிலும், பெரும் சோகத்திலும் உள்ளனர்.
கடந்த 1-2 ஆண்டுகளில் துபாய் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் இந்த திட்டங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் டெலிவரி செய்யப்படும் என்ற வாக்குறுதியில் முதலீட்டை பெற்றன.
ஆனால் தற்போது போர் பதற்றம் காரணமாக சிலர் ரியல் எஸ்டேட் விலை குறையும் என்று அஞ்சுகின்றனர். ஆனால் நிபுணர்கள் கூறுவது, விலை பெரிதாக குறைய வாய்ப்பில்லை. மேலும் போர் பதற்றத்தால் தற்காலிக விலை சரிவு ஏற்பட்டாலும், விரைவில் மீண்டு வரும். மேலும் கட்டுமானத்தில் உள்ள வீடுகளின் டெலிவரி அதாவது ஹேண்டோவர் காலம் அதிகரிக்கும் வாய்ப்பு வரலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
துபாய் ரியல் எஸ்டேட்
துபாய் ரியல் எஸ்டேட் சந்தை உலகளாவிய முதலீட்டாளர்களால் பெரிய அளவில் ஈர்க்கப்பட்டு உள்ளது. இந்த போருக்கு நடுவிலும் துபாய் அரசும், UAE அரசும் அந்நாட்டு மக்களுக்கு பெரிய அளவில் உதவிகளையும், பாதுகாப்பையும் அளித்து வருகிறது. தற்போது துபாய் முதலீட்டு சந்தைக்கும், ரியல் எஸ்டேட் துறைக்கும் புவிசார் பதற்றங்கள் இருந்தாலும், இது தற்காலிகமானது தான், துபாய் தொடர்ந்து உலகின் முக்கிய நிதியியல் மையமாக இருக்கும்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications