மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர், துபாய் ரியல் எஸ்டேட் சந்தையை தலைகீழாக புரட்டிப்போட்டது. கொரோனா தொற்றுக்கு பின்பு ஜப்பான் முதல் அமெரிக்கா வரையில் இருக்கும் பணக்காரர்கள் சொந்த வீடு வாங்கினால் இது துபாயில் தான் என்ற அளவுக்கு நிலை மாறியது. இதனால் துபாயில் பல வருட வளர்த்தி 1-2 வருடத்தில் பதிவானது மட்டும் அல்லாமல் ரியல் எஸ்டேட் துறையில் வராலாறு காணாத தொகையை ஒப்பந்தம் துபாயில் நடைபெற்றது.
இப்படி பாலாறும் தேனாறும் ஓடிய துபாய் ரியல் எஸ்டேட் தற்போது பெரும் நெருக்கடிக்கு மத்தியில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. உலக பணக்காரர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு மையமாக கருதப்பட்ட Dubai தற்போது அந்த இமேஜை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பரிவர்த்தனை சரிவு
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடங்கிய மூன்று வாரங்களுக்குள், துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில் பரிவர்த்தனை கணிசமாக குறைந்துள்ளது. Goldman Sachs வெளியிட்ட மதிப்பீட்டின் படி, மார்ச் மாதத்தின் முதல் 12 நாட்களில், UAE ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் வருடாந்திர அடிப்படையில் 37% குறைந்துள்ளன. அதேசமயம், மாதாந்திர அடிப்படையில் 49% வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த திடீர் சரிவு, முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைத்து, அச்சத்தை அதிகரித்துள்ளது.
விலையில் தள்ளுபடி
சந்தை மந்தநிலை காரணமாக, சில சொத்துகள் ஏற்கனவே 12% முதல் 15% வரை தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. உதாரணமாக, உலகின் உயரமான கட்டிடமான Burj Khalifa அருகிலுள்ள ஒரு சொத்து, 735,000 டாலரில் இருந்து 650,000 டாலராக குறைத்து "Urgent Sale" என்ற விளம்பரத்துடன் விற்பனை சந்தைக்கு வந்துள்ளது.
மேலும், துபாயின் பிரபலமான Palm Jumeirah பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்டும், சுமார் 15% தள்ளுபடியில் 2 மில்லியன் டாலர் விலையில் வழங்கப்படுவதை பார்க்கும் போது துபாய் ரியல் எஸ்டேட் சந்தை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்றதை தெளிவாக காட்டுகிறது.
துபாய் இமேஜ் டேமேஜ்
துபாய் கடந்த சில ஆண்டுகளில் வரிவிலக்கு (tax-free) சூழல் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை முறையால், உலகளாவிய பணக்காரர்களால் அதிக அளவில் ஈர்த்தது. ஆனால், ஈரான் தாக்குதல்கள் UAE மற்றும் வளைகுடா நாடுகளையும் குறிவைத்ததால், இந்த பாதுகாப்பு இமேஜ் சிதைந்துள்ளது.
இதனால், புதிய முதலீடுகள் குறைவதோடு, ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் கூட வெளியேறத் தொடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
பங்கு சந்தை தாக்கம்
இந்த நிலை, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகளிலும் கண்ணாடி போல் பிரதிபலித்துள்ளது. துபாயின் முக்கிய ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனமான Emaar Properties நிறுவனத்தின் பங்கு விலை, போர் தொடங்கியதிலிருந்து 26%க்கும் மேல் சரிந்துள்ளது. இது, சந்தையின் எதிர்கால வளர்ச்சி குறித்து முதலீட்டாளர்களின் பயத்தை காட்டுகிறது.
வேலைவாய்ப்பு
இந்த போர் காரணமாகவும், ரியல் எஸ்டேட் துறை வர்த்தகம் தேக்கம் அடைந்த காரணத்திற்காகவும் துபாய் மற்றும் அமிரீகத்தில் பிற பகுதிகளிலும் கட்டுமான பணிகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் UAE வளர்ச்சியின் முக்கிய தூணாகா இருக்கும் கட்டுமான துறையில் வேலைவாய்ப்புகளை முதலீட்டாளர்கள் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக உயர்ந்த துபாய் ரியல் எஸ்டேட் விலைகள், விலையில் ஒரு திருத்தத்தை எதிர்பார்த்திருந்தன. இந்த நிலையில், போர் ஒரு பெரிய சோதனையாக மாறி விலையில் பெரும் திருத்தம் உருவாகியுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications