ஆடம்பர சந்தைக்கும், ரியல் எஸ்டேட்-க்கும் மிகவும் பிரபலமான துபாயில் எப்போதும் அதிகப்படியான தொகைக்கு அப்பார்ட்மென்ட், வில்லா, கட்டிடம் விற்பனையாவது வழக்கம். ஏன் ஷாருக் கான், முகேஷ் அம்பானி முதல் பல பிரபலங்களும், ரஷ்ய பில்லியனர்களும் துபாயில் ஆடம்பர வீடுகளை வாங்குவது வழக்கமான ஒரு விஷயம். ஆனால் இந்த சற்று வித்தியாசமாக வெறும் மணல் பல நூறு கோடிக்கு வாங்கப்பட்டு உள்ளது.
ஆசிய சந்தையில் ஐக்கிய அரபு நாடுகள் முக்கிய வர்த்தக சந்தையாக மாறி வரும் வேளையில், பல முன்னணி நிறுவனங்களும், பணக்காரர்களும் துபாயில் பணத்தை குப்பை போல் கொட்டி வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் துபாயில் வரி சலுகை அதிகமாக இருக்கும் காரணத்தால் துபாய் ரியல் எஸ்டேட் துறையும் முதலீட்டு சந்தையும் உயர்ப்புடன் உள்ளது.

இந்த நிலையில் துபாயில் பெரிய மேன்ஷன்-ஓ, வில்லா-வோ, அப்பார்ட்மென்ட்-ஓ, penthouse-ஓ இல்லை... செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மணல் குவியல் அதாவது செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவை ஒரு பெரும் பணக்காரர் 125 மில்லியன் திர்ஹாம் தொகைக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பின் படி சுமார் 278.89 கோடி ரூபாயாகும். ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்த இந்த டீல் மூலம் புதிய சாதனை உருவாகியுள்ளது.
துபாயில் மிகவும் பிரபலமாக இருக்கும் Jumeirah Bay Island-ல் கடல் குதிரை போல் இருக்கும் ஒகு குட்டி தீவை மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு உள்ளது. சுமார் 24500 சதுரடி கொண்ட Jumeirah Bay தீவை 125 மில்லியன் திர்ஹாம் தொகைக்கு வாங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் Jumeirah Bayவில் இந்த தீவு ஒரு சதுரடி 1,11,547 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த தீவை வாங்கியவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பது உறுதியான நிலையில் அவர் யார் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. இந்த நிலையில் இந்த தீவை வாங்கியவர் தனது குடும்பத்திற்கு இந்த தீவில் vacation home கட்ட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த தீவு 2 வருடங்களுக்கு முன்பு ஒருவருக்கு 36.5 மில்லியன் திராஹாம் தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் வெறும் 2 வருடத்தில் 88.5 மில்லியன் திர்ஹாம் லாபத்துடன் 125 மில்லியன் திர்ஹாம் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

கச்சா எண்ணெய் விலையை தொடர்ந்து அதிகமாக வைக்க திட்டமிட்டு உள்ள OPEC நாடுகள், உற்பத்தியை குறைத்து அதிகப்படியான லாபத்தையும் பார்த்து வருகிறது. மேலும் குறைவான வரி, குறைவான குற்றங்கள் கொண்ட துபாயில் கொரோனா தொற்று காலத்தில் இருந்து அதிகப்படியான முதலீடுகளை துபாயில் செய்து வருகின்றனர்.
இதைவிட முக்கியமாக ரஷ்யா- உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்ய பில்லியனர்களும், தொழிலதிபர்களும் தங்களுடைய பணத்தை அதிகளவில் துபாயில் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக ஆடம்பர ரியல் எஸ்டேட் துறையில் அதிகப்படியான முதலீட்டை செய்து அசத்தியுள்ளனர். இது துபாய்க்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிலும் இருக்கும் காரணத்தால் UAE ரியல் எஸ்டேட் துறை செழிப்புடன் உள்ளது.


Click it and Unblock the Notifications