துபாய்: அம்பானி முதல் ரஷ்ய பணக்காரர்கள் வரை தாறுமாறாக முதலீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய் ரியல் எஸ்டேட் துறை கடந்த சில வருடங்களாகவே மந்தமாக இருந்தது, சொல்லப்போனால் பல ஆடம்பர வீடுகள், முக்கியப் பகுதிகளில் இருக்கும் சொத்துக்கள் கூட விற்பனை செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 12 மாதத்தில் துபாய் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய வளர்ச்சியைப் பதவி செய்தது மட்டும் அல்லாமல் பல வெளிநாட்டுப் பணக்காரர்களைத் துபாய் ஈர்த்துள்ளது.

இப்படி ஈரத்த பணக்கார்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி, அர்செல்லார் மிட்டல் நிறுவனத்தின் தலைவரான லட்சுமி மிட்டல் ஆகியோரும் அடக்கம்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

துபாயின் முக்கிய ரியல் எஸ்டேட் பகுதியாக விளங்கும் Palm Jumeirah என்னும் பீச் வில்லா பகுதியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆடம்பர வீட்டை தனது இளைய மகனான அனந்த் அம்பானிக்கு வாங்கினார்.

துபாய் ரியல் எஸ்டேட்

துபாய் ரியல் எஸ்டேட்

இதுதான் துபாய் ரியல் எஸ்டேட் துறையில் விலை உயர்ந்த ஒப்பந்தமாக இருந்தது, இந்தச் சாதனையை 13 வாரங்களுக்குத் தக்கவைத்து இருந்தார் முகேஷ் அம்பானி. இதன் பின்பு 82.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு வீடு இதே Palm Jumeirah பகுதியில் விற்பனை செய்யப்பட்டது.

 Palm Jumeirah பகுதி
 

Palm Jumeirah பகுதி

இந்த மாதம் மட்டும் துபாய் நில துறை வெளியிட்ட தரவுகள் படி சுமார் 163 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் Palm Jumeirah பகுதியில் மட்டுமே செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. இது தான் Palm Jumeirah வர்த்தக வரலாற்றில் வரலாற்று உச்ச அளவாகும்.

70 சதவீதம் பணப் பரிவர்த்தனை

70 சதவீதம் பணப் பரிவர்த்தனை

மேலும் துபாயில் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் பெரும்பாலானவை அதாவது 70 சதவீதம் பணமாகச் செலுத்தப்படுகிறது. பொதுவாகக் கடன் வாயிலாகத் தான் பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் செய்யப்படும், ஆனால் தற்போது துபாயில் செய்யப்படும் வர்த்தகம் அனைத்தும் பணமாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டு முடிக்கப்படுகிறது.

லட்சுமி மிட்டல்

லட்சுமி மிட்டல்

முகேஷ் அம்பானியை தொடர்ந்து பிரிட்டன்-இந்திய பணக்காரரான லட்சுமி மிட்டல் 3 நிலங்களை வாங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து ஐரோப்பா, அமெரிக்கா, கனடா நாடுகளைச் சேர்ந்த பலர் வில்லா, அப்பார்ட்மென்ட் வாங்கிக் குவித்து வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய பணக்காரர்கள்

ரஷ்ய பணக்காரர்கள்

அனைத்தையும் தாண்டி ரஷ்யா - உக்ரைன் போரை தொடர்ந்து ரஷ்யா பணக்காரர்கள் பலர் தங்களது பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகத் துபாயில் அதிகளவிலான தொகையை முதலீடு செய்துள்ளனர். இதன் எதிரொலியாகத் துபாய் முக்கிய ரியல் எஸ்டேட் சொத்துக்களின் விலை கடந்த 12 மாதத்தில் 70.3 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dubai's Luxury Real Estate Boom: Mukesh Ambani, Lakshmi Mittal, russian rich people invested

Dubai's Luxury Real Estate Boom: Mukesh Ambani, Lakshmi Mittal, russian rich people invested
Story first published: Wednesday, October 19, 2022, 17:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X