உலகிலேயே ஆடம்பரம், காஸ்டிலியான வாழ்க்கை முறை, மொத்த வளைகுடா நாடுகளுக்கும் பார்டி நகரமாக இருக்கும் துபாய் கடந்த ஒரு வருடமாக ஆடம்பர ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு பெயர்போன இடமாக மாறியுள்ளது. ரஷ்ய பணக்காரர்கள் முதல் முகேஷ் அம்பானி வரையில் துபாயில் பெரிய பெரிய ஆடம்பர வீடுகளை வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆடம்பர ரியல் எஸ்டேட்-க்கு பெயர்போன துபாயில், பிரான்ஸ் நாட்டில் மிகவும் பிரபலமான Versailles மாளிகைய நினைவூட்டும் வகையில் பல வருடமாக ஒரு அரண்மனை போன்ற வீடு கட்டப்பட்டு வந்தது.
இந்த வீடு தற்போது சுமார் 750 மில்லியன் திர்ஹாம் அதாவது 1,600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது, அடபோங்கடா எங்க ஊர் அம்பானி வீட்டின் மதிப்பே 16000 கோடி ரூபாய். நீங்க என்னடானா 1600 கோடிக்கே காஸ்ட்லியான வீடு-ன்னு கூவுறீங்க.
துபாய் ரியல் எஸ்டேட் தரவுகள் படி, இந்த நகரத்தில் பல கட்டினம் பல ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டு இருந்தாலும் சதுரடி மதிப்பில் இதுதான் காஸ்ட்லி. துபாய் வரலாற்றில் 210 மில்லியன் திர்ஹாம்-க்கு ஆகஸ்ட் 2022ல் விற்பனை செய்யப்பட்ட ஒரு சொத்து சதுரடி 5614 திர்ஹாம்-க்கு விற்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த "மார்பிள் பேலஸ்" என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம் சதுரடி 12500 திர்ஹாம்-க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் துபாயில் மிகவும் விலையுயர்ந்த வீடாக உள்ளது, இந்த வீட்டில் ஐந்து படுக்கையறைகள் மட்டுமே இருந்தாலும், மிகவும் காஸ்ட்லியான ரியல் எஸ்டேட் பகுதியான Emirates Hills-ல் இந்த வீடு சுமார் 60,000 சதுர அடியில் அமைந்துள்ளது.
இந்த வீட்டின் மாஸ்டர் பெட்ரூம் மட்டுமே 4000 சதுர அடியில் உள்ளது, இது இந்தியாவில் பெரிய வீடுகள் என கூறப்படும் வீடுகளை காட்டிலும் பெரியாதாக உள்ளது பெட்ரூம். மார்பிள் பேலஸ் வீட்டின் தரை மட்டத்தில் பொழுதுபோக்கு மற்றும் உணவருந்துவதற்கான இடங்கள் உள்ளன.
மார்பிள் பேலஸ் வீட்டில் 15 கார்களை நிறுத்துவதற்கான பெரிய கேரேஜ், 19 ஓய்வறைகள், உட்புற மற்றும் வெளிப்புற ஸ்விம்ங் பூல், 80,000 லிட்டர் தண்ணீர் உடன் பவளப்பாறை கொண்ட ஸ்விம்ங் பூல், ஒரு சிறிய மின் நிலையம் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை அறைகள் ஆகியவையும் உள்ளது.
Emirates Hills பகுதி ஒரு gated கம்யூனிட்டி என்பதால் இந்த வீட்டில் இருப்பவர்கள் 70000 சதுர அடி கோல்ஃப் மைதானத்தை பயன்படுத்துக்கொள்ள முடியும். இதேபோல் ஒவ்வொரு விருந்தினர் அறையும் சுமார் 1,000 சதுர அடி, இரண்டாவது பெரிய படுக்கையறை 2500 சதுர அடி. இரண்டு வங்கி லாக்கர்கள், 12 பணியாளர்கள் அறைகளும் உள்ளது.
"மார்பிள் பேலஸ்" என்று அழைக்கப்பட முக்கிய காரணம் இந்த கட்டிடம் சுமார் 80 முதல் 100 மில்லியன் திர்ஹாம் மதிப்பிலான மிகவும் காஸ்ட்லியான இத்தாலிய மார்பிள் கல்லால் கட்டப்பட்டது. இந்த வீடு பிரபல ஆடம்பர பொருட்களை ஏலம் விடும் Sotheby's International Realty விற்கிறது. இந்த வீட்டின் கட்டுமானப் பணிகள் 12 ஆண்டுகளாக நடந்தது குறிப்பிடத்தக்கது.






Click it and Unblock the Notifications