துபாய், வளைகுடா நாடுகளின் நுழைவு வாயிலாக இருக்கும் இந்நகரம் வெறும் கச்சா எண்ணெய், எரிவாயு வர்த்தகம் செய்யும் நகரமாக மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் நாடுகளின் முதலீட்டையும், மக்களை ஈர்த்து முக்கிய வர்த்தக நகரமாக மாறியுள்ளது. இந்த நிலையில் பல கோடி மக்கள் தங்கியிருக்கும் துபாயில் புதிதாக வாடகை வீட்டில் இருப்போருக்கு செக் வைக்கும் வகையில் புதி விதி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
துபாய் சட்டம் நம்பர் 4, 2026 கீழ் கோ லிவ்விங், shared housing, bedspaces விதிகளை கடுமையாக்கி, இதை திருத்தும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இப்புதிய சட்டம் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரும் வேளையில் துபாயில் இருக்கும் இந்தியர்கள் இந்த விதியை முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக பெரு நகரங்களில் வீடுகளின் வாடகை மிகவும் அதிகமாக இருக்கும், இதனால் வீட்டை நண்பர்கள் மத்தியிலும், குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும், பல இடத்தில் ஒரே வீட்டை 2-3 குடும்பங்களுகம் பகிர்ந்துக்கொள்வது வழக்கம். இதன் மூலம் வாடகை சுமை குறையும்.
இதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் துபாய் தற்போது கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தில் உள்வாடகை அதாவது Subletting முறை இருக்க கூடாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. அதாவது நீங்கள் ஒரு 1 BHK அப்பார்டமென்ட்டை வாடகைக்கு எடுப்பதாத வைத்துக்கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் போட்டப்பட்ட ஒப்பந்தத்தில் நீங்கள் மட்டும் தங்குவதற்காக கையெழுத்திட்டு இருக்கும் வேளையில், உங்களுடைய நண்பரையோ அல்லது வேறு ஒருவரையோ குடிவைத்து அவரிடம் வாடகை வசூல் செய்கிறீர்கள் எனில் அது தவறு என துபாய் அரசு கூறுகிறது.
இதேபோல தான் bedspace முறையும் கடுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. கூடுதலாக நபர்களை தங்க வைக்க வேண்டுமாயின் வீட்டு உரிமையாளருடன் ஒப்புதலுடனே செய்யப்பட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதேபோல் அப்பார்ட்மென்ட் மற்றும் வில்லாக்கள் தற்போது shared housing ஆக செயல்படுமாயின் வீட்டு உரிமையாளர்கள் இதற்கு துபாய் நகராட்சியிடம் ஒப்புதல் பெற வேண்டும். இப்புதிய கட்டுப்பாடுக்கு முக்கியமான காரணம் துபாய் அரசு தற்போது கட்டிட பாதுகாப்பு, ஒரு வீட்டில் அதிகப்படியாக தங்க அனுமதிக்கப்படும் நபர்கள் எண்ணிக்கை, ஒருவருக்கு குறைந்தபட்சம் எவ்வளவு இடம் இருக்க வேண்டும் போன்ற அடிப்படை விஷயத்தில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.
இதன் மூலம் இனி எந்தொரு வீடும் shared accommodation ஆக எளிதில் மாற்ற முடியாப்படி சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. இதனால் ஒவ்வொரு வீடும் அடிப்படை கட்டமைப்பு, பாதுகாப்புகளை உறுதி செய்த பின்பு எத்தனை பேர் ஒரு வீட்டில் தங்கலாம் என்பதை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பின்பே shared accommodation ஆக மாற்ற முடியும்.
இதற்காக கொடுக்கப்படும் உரிமை என்பது ஒரு வருடம் மட்டுமே, ஆனால் வீட்டின் உரிமையாளர்கள் 2 வருடத்திற்கு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ள முடியும். உரிமம் காலம் முடியும் வேளையில் 30 நாட்களுக்கு முன்பு மீண்டும் விண்ணப்பம் செய்து புதுப்பிக்கப்பட்ட உரிமம் பெற வேண்டும்.
இதேபோல் இனி shared accommodation சேவையை வீட்டின் உரிமையாளர்கள், சொத்துக்களை நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள், வீட்டை நேரடியாக உரிமையாளரிடம் குத்தகைக்கு வாங்கிய நிறுவனங்கள் மட்டுமே வீட்டை பகிர்ந்து அளிக்க முடியும். தனிநபர் யாரும் வீட்டையோ, படுக்கையோ, பெட்ரூம்-ஐ உள்வாடகைக்கு விட முடியது.
இந்த விதியை மீறி உள்வாடகை விடும் நபருக்கு 500 முதல் 5 லட்சம் திராஹாம் வரையிலான அபராதம் விதிக்கப்படும். இதேபோல் தொடர்ந்து இத்தகைய குற்றங்களை செய்வோர் மீது 10 லட்சம் திராஹாம் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
இதனால் வாடகையை குறைக்க உள்வாடகைக்கு விட்ட இந்தியர்களே உஷாராக முன்கூட்டியே வீட்டி உரிமையாளரிடம் புதிய ஒப்பந்தம் செய்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் பெரும் அபராதத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications