இந்தியாவைக் காட்டிலும் துபாயில் தங்கத்தின் விலை குறைவு. உதாரணமாக அங்கு 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 12,532-க்கும், 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.11,607-க்கும் விற்பனையாகிறது. ஆனால் இந்தியாவில் 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.14,617-க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.13,400-க்கும் விற்பனையாகிறது. இந்த விலை வித்தியாசத்தால் தான் துபாயில் இருப்பவர்கள், இந்தியாவில் இருந்து துபாய் செல்பவர்கள் தங்கத்தை வாங்கி வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஆனால் சுங்கத்துறை துபாயில் இருந்து தங்கத்தை கொண்டு வர சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதை பின்பற்றவில்லை என்றால் தேவையில்லாத சட்ட சிக்கலுக்கு ஆளாக நேரிடலாம்.

இந்திய சுங்கத் துறை விதிகளின்படி துபாயில் இருந்து வருபவர்கள்.. கொண்டு வரும் ஆபரணத் தங்கம், தங்க பார் மற்றும் பிஸ்கட் காயின்கள் போன்றவற்றுக்கு வெவ்வேறு வரி விதிக்கப்படுகிறது. ஆபரண தங்கத்தை கொண்டு வரும் போது வரி எதுவும் கிடையாது. ஆனால் இதற்கும் குறிப்பிட்ட நிபந்தனை இருக்கிறது. அதேபோல தங்க கட்டிகளோ அல்லது காசுகளோ கொண்டு வந்தால் அதற்கு கட்டாயம் வரி செலுத்தியாக வேண்டும்.
எவ்வளவு தங்கத்தை வரியின்றி கொண்டு வரலாம்?: 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வந்த பேக்கேஜ் ரூல்ஸ் விதிகளின்படி வெளிநாட்டில் ஒரு வருடத்திற்கு மேல் தங்கி இந்தியா திரும்பும் பயணிகள் அல்லது இந்திய வம்சாவளியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கீழ்காணும் விதிமுறைகளின் கீழ் தங்கத்தை கொண்டு வரலாம்.
பெண்களாக இருந்தால் 40 கிராம் வரையிலான தங்கத்தை வரியின்றி எடுத்து வர அனுமதி உண்டு, ஆண்களாக இருந்தால் 20 கிராம் வரையிலான தங்கத்தை எடுத்து வர அனுமதி உண்டு. அதற்கு ஆண் பெண் என யாராக இருந்தாலும் ஒரு வருடத்திற்கு மேல் வெளிநாட்டில் வசித்திருக்க வேண்டும். ஆனால் வெளிநாட்டில் ஒரு வருடத்திற்கு குறைவாக தங்கி இருந்தால் வரி விலக்கு சலுகைகள் கிடைக்காது.
அதேபோல இந்தியாவிலிருந்து துபாய்க்கு நகைகளை கொண்டு சென்றால் சுங்கத்துறையிடமிருந்து எக்ஸ்போர்ட் சர்டிபிகேட் பெற்றுக் கொள்வது நல்லது. இதனால் இந்தியாவிற்கு மீண்டும் திரும்பும் போது எந்த வித வரியும் செலுத்தாமல் நகைகளை கொண்டு வரலாம்.
இதை விட கூடுதலாக தங்கத்தை கொண்டு வந்தால் அதற்கு 15 சதவீத சுங்க வரி விதிக்கப்படும். துபாயிலிருந்து அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் தங்கத்தை கொண்டு வருபவர்கள் பாஸ்போர்ட், தங்கம் வாங்கியதற்கு முறையான பில், தங்க நகைகளின் பியூரிட்டி சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
அதேபோல அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு மேல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எந்த பொருளை கொண்டு வந்தாலும் அதை ATITHI என்ற செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உதாரணமாக அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு மேல் இருக்கும் தங்க நகைகள், தங்க கட்டிகள், மதுபானங்கள், வெளிநாட்டு பணம் என எதைக் கொண்டு வந்தாலும் அதன் விவரங்களை இந்தியாவில் நுழைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே இந்த செயலில் பதிவேற்றம் செய்து வைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
