ஐடி முதல் ப்ளூ காலர் ஜாப் வரையில் துபாயில் வேலைவாய்ப்புகள் கொடிக்கிடக்கும் வேளையில், தமிழ்நாட்டு மக்கள் விரும்பி செல்லும் இடமாக உள்ளது. இந்த நிலையில் துபாய் அரசு புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு பணி அனுமதி (work permit) வழங்குவதற்கான பிராசஸிங் நேரத்தை 30 நாட்களில் இருந்து ஐந்தாக குறைக்கும் வகையில் துபாய் அரசாங்கம் 'வொர்க் பண்டில்' டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக, பணி அனுமதிகள் அதாவது வொர்க் பர்மிட் மற்றும் குடியிருப்பு விசாக்கள் (residency visa) பெறுவதற்கு 30 நாட்கள் வரை ஆகும். இதற்காக 16 ஆவணங்கள் கொண்ட ஒரு பெரிய கட்டு கொண்ட பேப்பர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
'வொர்க் பண்டில்' டிஜிட்டல் தளம் மூலம் இதற்கான நேரத்தை வெறும் ஐந்து நாட்களாக குறைப்பதன் மூலமும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஐந்து ஆவணங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. கூடுதலாக, விண்ணப்பதாரரின் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தும்.
இதேபோல் விசா மையங்களுக்கு நேரில் ஆஜராகுவதற்கான எண்ணிக்கை ஏழிலிருந்து இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஒர்க் பண்டில் இயங்குதளமானது நாட்டில் வசிப்பிட மற்றும் வேலைக்கான அனுமதிகள் நடைமுறைகளை எளிதாக்கும், எளிமையாக்கும்.
அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள், அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இந்த வேகமான மற்றும் எளிய அமைப்பு மூலம் கணிசமான சேமிப்புகளையும் கொடுக்கிறது என்று துபாயின் ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்தார்.
இந்த வொர்க் பண்டில் டிஜிட்டல் தளம் துபாயில் வேலை வாய்ப்புகளைத் தேடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (மொஹ்ரே), அடையாளத்துக்கான பெடரல் ஆணையம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP), துபாய் சுகாதார ஆணையம் (DHA), மற்றும் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை, மற்றும் வதிவிடப் பொது இயக்குநரகம், வெளிநாட்டு விவகாரங்கள் (GDRFA) ஆகியவற்றை வேலை தொகுப்பு ஒருங்கிணைக்கும்.
Story Written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications