கடந்த சில தினங்களாகவே பிட்காயின் மதிப்பானது அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது. பிட்காயின் விலை மட்டும் அல்ல டோஜ்காயின், எதிரியம் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளும் சரிவினை சந்தித்து வருகின்றது.
இது சமீபத்திய சீனாவின் அறிவிப்பு, டெஸ்லாவின் அறிவிப்புகளை தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகிறது. கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டாலும், மேற்கொண்டு சரிவு பாதைக்கே சென்று கொண்டுள்ளது.
என்ன தான் காரணம் ஏன் இந்த சரிவினைக் கண்டு வருகின்றது. குறிப்பாக சீனாவின் அறிவிப்புக்கு புறகு இந்த மாதத்தில் இதுவரையில் கிட்டதட்ட 40% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.
பிட்காயின் நிலவரம்
பிட்காயின் விலையானது தற்போது 5.77% குறைந்து, 37,083 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் முன்னதாக 35,184.77 டாலர்கள் வரையில் வீழ்ச்சி கண்டு திரும்பியுள்ளது. இதே கடந்த 24 மணி நேரத்தில் 40,430.21 டாலர்கள் வரையிலும் சென்று திரும்பியது.
ரேஜ் பவுன்டிலேயே வர்த்தகம்
பிட்காயின் விலையானது தற்போது சரியும் நிலையிலேயே இருந்து வருகின்றது. இது 34,000 டாலர்கள் முதல் 40,000 டாலர்கள் என்ற இடையிலேயே வர்த்தகமாகி வருகின்றது. வர்த்தகர்கள் பலரும் பிட்காயின் மதிப்பானது ஒரு ரேஜ்பவுண்டிலேயே வர்த்தகமாகலாம் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
கிரிப்டோகரன்சிகள் மோசமான சரிவு
கிரிப்டோகரன்சிகள் நடப்பு மே மாதத்தில் மட்டும் 37% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளன. இது கடந்த செப்டம்பர் 2011க்கு பிறகு மோசமான நிலையாகும். இது சீனாவின் அறிவிப்புக்கு பிறகு இந்த மோசமான சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக டெஸ்லாவின் அறிவிப்பும் வந்தது.
துபாய் காயின் ஏற்றம்
எனினும் துபாயின் முதல் கிரிப்டோகரன்சியான துபாய்காயின் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000% ஏற்றம் கண்டுள்ளதது. $0.17% டாலராக இருந்த துபாய்காயின், மே 27 அன்று $1.13 டாலராக அதிகரித்துள்ளது. துபாய் ஒரு பொது பிளாக்செயின் அடிப்படையில் இந்த கரன்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் பல சேவைகளுக்கும் மக்கள் பயன்படுத்தும் விதமாக விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அரபு எமிரேட்ஸை சேர்ந்த நிறுவனமான அரேபியான்செயின் டெக்னாலஜி அறிமுகப்படுத்தியுள்ளது.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications