மீபத்தில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் இந்தியர்கள் பெருமைப்படும் அளவிற்கு நடந்த இரண்டு நிகழ்வுகளில் ஒன்று பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது, மற்றொன்று இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றது என்பது குறிபிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ நிறுவனம் பதிவு செய்த ட்விட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான்
சமீபத்தில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தானின் விரல் நுனியில் இருந்த வெற்றியை விராட் கோலி தட்டிச் சென்றார் என்பதும் பாகிஸ்தானை வீழ்த்தியதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதனை தீபாவளியாக கொண்டாடினர் என்பதும் தெரிந்ததே.
சொமேட்டோ vs கரீம் பாகிஸ்தான்
இந்த வெற்றி காரணமாக இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ மற்றும் பாகிஸ்தானின் உணவு டெலிவரி நிறுவனமான கரீம் பாகிஸ்தான் ஆகிய இடையே நடந்த ட்விட்டர் போர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சொமேட்டோ டிவிட்
அக்டோபர் 21ஆம் தேதி சொமேட்டோ நிறுவனம் தனது ஃபாலோயர்களிடம் 'நீங்கள் விளக்குகளை ஏற்றி வைக்க தயாராகி விட்டீர்களா? என ட்விட் செய்தது. அதாவது இந்திய-பாகிஸ்தான் போட்டியை எதிர்கொள்ள தயாராகி விட்டீர்களா? என்ற அர்த்தத்தில் அந்த ட்விட் உணரப்பட்டது. இதனை அடுத்து கரீம் பாகிஸ்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் 'நீங்கள் தோல்வியடைய தயாராக உள்ளீர்கள் என நம்புவோம் என்று பதிலடி கொடுத்தது.
பதிலடி
அதன் பிறகு இந்திய அணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து சொமேட்டோ நிறுவனம் தனது ட்விட்டரில், 'அன்பான பாகிஸ்தானியர்களே, நீங்கள் உணவை (தோல்வி ) ஆர்டர் செய்ய விரும்புகிறீர்களா? உங்களுக்கு சேவை செய்ய விராட் தயாராக உள்ளார் என கிண்டலுடன் பதிவு செய்தது. இதற்கு கரீம் பாகிஸ்தான் 'நாங்கள் டயட் கட்டுப்பாட்டில் உள்ளோம், ஆகையால் எதையும் ஆர்டர் செய்யவில்லை என தெரிவித்தது. அதற்கு பதிலடியாக சொமேட்டோ நிறுவனம், 'தீபாவளிக்கு இனிப்பு சாப்பிடுவதற்கு பதில் கண்ணீரில் மூழ்கி விட்டீர்களா? என பதிலடி கொடுத்தது.
ட்விட்டர் போர்
கிரிக்கெட் ரசிகர்கள் இந்த இரண்டு நிறுவனங்களின் ட்விட்டுகளை பார்த்து மகிழ்ந்தனர். ஆனால் இவ்வாறு இரு நிறுவனங்களும் ட்விட்டரில் போர் செய்வது இது முதல்முறையல்ல. கடந்த செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்த போதும் இந்த இரு நிறுவனங்கள் ட்விட்டரில் மறைமுகமாக மோதிக்கொண்டன என்பது குறிப்பிடப்பட்டது.
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அட்சய பாத்திரம்!! ஒவ்வொரு நொடிக்கும் காசு!!

தோனி-க்கு நிகராக சஞ்சு சாம்சன்.. குரு சிஷ்யன் என்றால் சும்மாவா..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications