இந்திய நகரங்களுக்கு எல்லாம் உள்கட்டமைப்பு, போக்குவரத்து உள்ளிட்டவை மட்டும் பிரச்சினையாக இல்லை நகரை தூய்மையாக வைத்து பராமரிப்பதும் பெரிய சவாலாக தான் உள்ளது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம் , சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூருவில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் வெளி நாட்டவர்களும் என ஏராளமானவர்கள் வந்து தங்கி இருக்கின்றனர்.
பெங்களூரு நகரை தூய்மையாக வைத்துக் கொள்வது என்பது பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பெங்களூருவில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடு தேடி வந்து குப்பைகளை பெற்று செல்கின்றனர் . இருந்தாலும் பொதுமக்களில் ஒரு சிலர் குப்பைகளை குப்பை தொட்டியிலும் கொட்டுவது கிடையாது, வீடு தேடிவரும் தூய்மை பணியாளரிடம் ஒப்படைப்பதும் கிடையாது.

ஒரு கவரில் போட்டு வைத்துக்கொண்டு போகிற போக்கில் அப்படியே தெருக்களில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் நகரின் தூய்மையே கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே தான் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் நகரின் தூய்மை தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது . பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் தெருக்களில் குப்பை கொட்டியவர்களை கண்டுபிடித்து அவர்களின் வீட்டின் முன்பு அந்த குப்பைகளை கொண்டு சென்று கொட்டி நூதன தண்டனை வழங்கியது.
இந்த சூழலில் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை அமைப்பு ஒரு தனித்துவமான திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. அதாவது பொதுமக்களில் யாரேனும் தெருக்களில் குப்பைகளை கொட்டுவதையோ வீசிவிட்டு செல்வதையோ வீடியோவாக எடுத்து பகிரக்கூடிய நபர்களுக்கு 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது.

இதற்காகவே பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் ஒரு செயலியை உருவாக்கி வருகிறதாம், அதுவரை மக்கள் வாட்ஸ் அப்பில் வீடியோவை பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் நகரில் நீங்கள் யாரேனும் தெருக்களில் குப்பைகளை கொட்டுவதையோ அல்லது வீசிவிட்டு செல்வதையோ பார்த்தீர்கள் என்றால் உடனடியாக உங்களுடைய போனில் வீடியோ எடுத்து 9448197197 என்ற whatsapp எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.
இந்த வீடியோவில் குப்பை கொட்டக்கூடிய அந்த நபரின் முகம் தெளிவாகவும் , அது எந்த ஏரியா என்பதும் தெளிவாகத் தெரிய வேண்டும் . இந்த வீடியோவை அதிகாரிகள் ஆய்வு செய்து மார்ஷல்களை அனுப்பி வீடியோ எடுக்கப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி குப்பை கொட்டியது உண்மைதானா என உறுதிப்படுத்துவார்கள். இதன் பின்னர் வீடியோ எடுத்து தந்த நபருக்கு 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும். குப்பையை கொட்டிய நபருக்கு 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சம்பந்தபட்ட பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் குறிப்பிட்ட அந்த நபரின் புகைப்படத்தை வழங்கி விடுவார்கள், காவல்துறையினர் முதல் முறை தவறு செய்பவர்களிடம் 1000 ரூபாயும் இரண்டாவது முறை தவறு செய்பவர்களிடம் 2000 ரூபாயும் அபராதமாக வசூல் செய்வார்கள்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications