செப்டோ, பிளிங்கிட் போன்ற குயிக் காமர்ஸ் செயலிகளுக்கு போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனம் மினிட்ஸ் என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இதற்கு குவிக் காமர்ஸ் சேவையை இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கிய டன்சோ நிறுவனத்தின் இணை நிறுவனர் கபீர் பிஸ்வாஸ் தலைமை பொறுப்பு ஏற்று செயல்படுத்த இருப்பது தெரியவந்துள்ளது .
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக குயிக் காமர்ஸ் எனப்படும் 10 - 15 நிமிடங்களுக்குள் பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த துறையில் பிளிப்கார்ட் , மினிட்ஸ் என்ற பெயரில் ஒரு செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த குயிக் காமர்ஸ் பிரிவுக்கு தலைமை ஏற்று செயல்படுத்த டன்சோ நிறுவனத்தின் இணை நிறுவனர் பிஸ்வாஸூடன் பிளிப்கார்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

சில மாதங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து மினிட்ஸ் செயலிக்கு தலைமை ஏற்று பிஸ்வாஸ் செயல்படுத்துவார். ஜனவரி 13ஆம் தேதி முதல் அவர் தன்னுடைய வேலையை தொடங்குவார் என்றும் , பிளிப்கார்ட் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் பத்ரியின் கீழ் செயல்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டன்சோ தற்போது நஷ்டத்தில் இயங்கி வரக்கூடிய நிலையில் நிறுவன முதலீட்டாளர்களிடம் தான் பிளிப்கார்ட்டுக்கு செல்வது குறித்து கபீர் பிஸ்வாஸ் தகவல் தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது. முதல் கட்டமாக பிளிப்கார்ட் நிறுவனம் டன்சோ நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்துவதாக இருந்தது.
ஆனால் டன்சோ நிறுவன முதலீட்டாளர்கள் பலரும் அதனை விரும்பவில்லை. இதனால் அந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது. இந்த நிலையில் தான் டன்சோ இணை நிறுவனர் கபீர் பிஸ்வாஸ் பிளிப்கார்ட்டில் இணைந்து செயல்படுவதற்கு முன் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டன்சோ நிறுவனத்தில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனமும் 26 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது, கூகுள் 20 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. இதில் ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 200 மில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்திருப்பதாக தெரிகிறது. ஆனால் தற்போது டன்சோ நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வரும் நிறுவனமாக மாறிவிட்டது. அதனை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துவிட்டது.
எனவே டன்சோ நிறுவனத்தை நிறுவிய பலரும் அதிலிருந்து வெளியேறி வேறு வேறு நிறுவனங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். இதனால் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடன்களை திரும்ப செலுத்தவில்லை எனக் கூறி டன்சோவுக்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தன. அது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது.
பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவில் செயல்பட்டு வரக்கூடிய செப்டோ , இன்ஸ்டாமார்ட், பிளிங்கிட் ஆகியவற்றுக்கு கடுமையான போட்டி தரும் வகையில் மினிட்ஸ் சென்ற செயலியை செயல்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறது. ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனம் இதற்காக 100 கிடங்குகளை அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மினிட்ஸ் செயலி வாயிலாக பத்து நிமிடங்களுக்குள் மின்னணு சாதனங்களை கூட வாங்கிக் கொள்ள முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Story written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications