இந்தியாவின் மிகப்பெரிய குவிக் காமர்ஸ் அதாவது உடனடி டெலிவரி சேவை அளிக்கும் Dunzo 60 - 80 ஊழியர்களை பணிநீக்கம் செய்த வெறும் மூன்று மாதங்களில் அடுத்து மீண்டும் ஒரு பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இது முந்தைய பணிநீக்கத்தை காட்டிலும் மிகவும் அதிகம் என்பதால் டன்சோ ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் குவிக் காமர்ஸ் பிரிவில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கு அச்சம் அதிகரித்துள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப் துறையில் பணிநீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், டன்சோ புதிய பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இயங்கி வரும் டன்சோ குவிக் காமர்ஸ் பிரிவில் முன்னோடி.

டன்சோ நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள வேளையிலும், இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தற்போது இருக்கும் மொத்த ஊழியர்களில் சுமார் 30 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பணிநீக்க அறிவிப்பு மூலம் சுமார் 300 ஊழியர்கள் பணிநீக்கத்தில் பாதிக்கப்படுவார்கள்.
Dunzo நிறுவனம் முந்தைய பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு வெறும் 3 மாதத்தில் அடுத்த பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. இந்தியாவில் பணவீக்கம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில், மக்கள் செலவு செய்யும் அளவீட்டை குறைக்க துவங்கியுள்ளனர், இதனால் டன்சோ வர்த்தகமும் குறையும் என்பதால் இந்த பணிநீக்கத்தை அறிவித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் முன்னணி நிறுவனங்கள் அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் முதலீட்டை ஈர்க்க முடியாமல் தவித்து வரும் வேளையில் டன்சோ மட்டும் சமீபத்தில் convertible notes மூலம் சுமார் 75 மில்லியன் டாலர் அளவிலான நிதியை முதலீடாக பெற்றது. ரிலையன்ஸ் ரீடைல் முதலீட்டில் இயங்கும் டன்சோ வேகமாக வளர்ந்தாலும் அதன் லாப அளவீட்டை தக்கவைக்க இந்த பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.
கடந்த முதலீட்டு சுற்றில் டன்சோ நிறுவனம் சுமார் 50 மில்லியன் டாலர் நிதியுதவி அதாவது முதலீட்டை கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திடமிருந்து மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள 25 மில்லியன் டாலர் மற்ற முதலீட்டாளர்களிடமிருந்தும் ஆகும்.

டன்சோ நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கபீர் பிஸ்வாஸ் ஏப்ரல் 5 ஆம் தேதி டவுன் ஹால் கூட்டத்தின் போது பணிநீக்கம் குறித்து ஊழியர்களிடம் கூறினார். இந்த அறிவிப்பில் அடுத்த 18 மாதங்களில் நிறுவனம் லாபகரமானதாக மாற வேண்டும் என்ற இலக்கை அடைய உறுதிசெய்ய நிறுவனம் கடினமான முடிவை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
டன்சோ நிர்வாகம் 30 சதவீத ஊழியர்கள் பணிநீக்கத்தை தவிர, Dunzo அதன் dark stores-களில் சுமார் 50 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. dark stores-களை மூட டன்சோ நிர்ணயம் செய்துள்ள முக்கிய கண்டிஷன் லாபம் தரக்கூடிய அல்லது லாபத்தை எட்டக்கூடிய கடைகளை மட்டுமே இயக்கும் மற்ற dark storesகள் மூடப்படும்.


Click it and Unblock the Notifications