இந்தியாவில் குவிக் காமர்ஸ் வர்த்தகம் எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் ஒரு சில நிறுவனங்கள் முதலீட்டை பெற்று வேகமாக சந்தையில் இருக்கும் டிமாண்ட் அளவை காட்டிலும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்கிறது. இதனால் பெரிய அளவிலான வர்த்தக பாதிப்புக்கு ஆளாகிறது.
அப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களிடம் முதலீட்டை பெற்ற டன்சோ குறைந்த காலக்கட்டத்திலேயே பெரிய அளவில் பல முக்கிய நகரங்களில் விரிவாக்கம் செய்தது. ஆனால் பவ்வேறு நிறுவனங்களின் போட்டி காரணமாக டன்சோ வர்த்தகத்தை இழந்தது மட்டும் அல்லாமல் விரிவாக்கம் செய்வது மூலம் முதலீட்டு இருப்பையும் இழந்தது.

இதற்கு மத்தியில் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் மாட்டிக்கொண்ட டன்சோ நிதி பற்றாக்குறை காரணமாக ஜூன், ஜூலை மாதம் சம்பளத்தை கூட கொடுக்க முடியாமல் மாட்டிக்கொண்டது. சமீபத்தில் பெற்ற முதலீடுகள் மூலம் இவ்விருமாத சம்பளத்தை நவம்பர் மாதம் அளிப்பதாக அறிவித்த டன்சோ நிர்வாகம் செலவுகளை குறைக்க முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
வெள்ளிக்கிழமை டன்சோ நிறுவனத்தின் ஆல் ஹேண்ட்ஸ் கூட்டத்தில் பேசிய நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக இருக்கும் கபீர் பிஸ்வாஸ் செலவுகளை குறைக்கும் விதமாக தற்போது இருக்கும் டன்சோ தலைமை அலுவலகத்தை மூடிவிட்டு புதிய இடத்திற்கு மாற்ற திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து ஊழியர்களுக்கு புதிய அலுவலக முகவரியை விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாகும் பட்சத்தில் ஊழியர்கள் பணிநீக்கம் இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும் செப்டம்பர் மாத சம்பளத்தை சரியான நேரத்தில் அக்டோபர் மாத முதல் வாரத்தில் அளிக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். இதனால் அடுத்த அதிரடி பணிநீக்க அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் டன்சோவில் இருந்து வரலாம்.
மேலும் டன்சோ தனது ஊழியர்களுக்கான சம்பளத்தை வங்கி கணக்கில் செலுத்தாமல் சம்பளம் கடன் சேவை நிறுவனமான onetap செயலி மூலம் வழங்குகிறது. இதை ஏற்க மறுக்கும் ஊழியர்கள் ONETAP செயலி மூலம் சம்பள கடனில் நிர்வாகம் சிக்க வைக்கிறது என்றும், தங்களுடைய விபரங்களை பகிர கூடாது என்றும் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதனால் பலர் டன்சோ நிறுவனம் திவாலாகிறதா என்ற கேள்வியை முன்வைத்தாலும், அதற்கான வாய்ப்புகள் இப்போது இல்லை. நிர்வாகம், வர்த்தகம் இயக்க முதலீடு திரட்டப்பட்டு உள்ளது, செலவுகளை குறைக்கும் நடவடிக்கை எடுத்தால் போதுமானது.


Click it and Unblock the Notifications