தமிழ்நாட்டில் முக்கிய திட்டங்களில் ஒன்றான மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் முக்கிய அப்டேட் ஒன்றை துணை முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, மகளின் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் பெண்களுக்கு நற்செய்தி வந்துள்ளது. யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லையோ இனி கவலைப்பட தேவையில்லை.
அதாவது யாரெல்லாம் புதிதாக மகளிர் உரிமைதொகைக்கு விண்ணப்பித்துள்ளார்களோ அவர்களுக்கு மூன்று மாதத்திற்குள் பணம் வந்து சேரும் என்று கூறியுள்ளார். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது வேடசந்தூர் தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.காந்திராஜன், தனது தொகுதி மற்றும் தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயன்பெறுகின்றனர் என்றும், பல்வேறு இடங்களில் ஏழை மக்கள் மனு அளித்தும் அனுமதியளிக்கப்படவில்லை என்ற விவரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர்.

அப்போது மனு அளித்து தகுதியானவர்கள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுமா என கேட்டார். அதே நேரத்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரனும், விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விகளுக்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு 3 மாதங்களுக்குள் வழங்கப்படும் என கூறினார். அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை 5.27 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், 76 சதவீதம் அதாவது 4 லட்சத்து 897 மகளிர் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை பெறுகின்றனர். வேடசந்தூர் 62 ஆயிரம் மகளிர், உரிமைத் தொகை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.
அதேபோல், மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1 கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றை ஆய்வு செய்ததில் 70 சதவீதம் அதாவது 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 விண்ணப்பங்கள் முதல் கட்டமாக ஏற்கப்பட்டன என்று கூறினார்.
கடந்த 2023-ம் ஆண்டு செப்.15ம் தேதி அண்ணா பிறந்த தினத்தன்று காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் முதல் முறை விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், அதன்படி, கூடுதலாக 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி 1 கோடியே 14 லட்சத்து 65,525 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும், தற்போது, திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ, அவ்வளவு பேருக்கும் எவரும் விடுபடாமல் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு நாங்கள் ஆய்வுக்கு செல்லும்போது, உரிமைத்தொகை வேண்டி மகளிர் விண்ணப்பம் அளிக்கின்றனர். அதுபற்றி, விவரங்களை சேகரித்து, முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று வருவதாகவும், முதல்வரின் அறிவுரைகளை பெற்று இதுவரை பயன்பெறாத மகளிருக்கு திட்டத்தின் பயன் கிடைப்பதற்கான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த முறை விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், திட்டத்தின் தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications