இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் ஆதார் கார்டு என்பது அத்தியாவசிய ஆவணமாக மாறிவிட்டது. ஆதார் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. இனி ஆதார் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டது. வங்கிக் கணக்கு, சிம் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, பங்குச் சந்தை டீமேட் கணக்குகள், அரசின் நலத்திட்ட உதவிகள், கடன் வாங்க போன்ற அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இன்னும் சில வாரங்களில் ஆதார் கார்டின் நகலை எங்கும் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு பதிலாக புதிய கியூஆர் கோடு அடிப்படையிலான "masked" ஆதாரை மின்னணு வடிவில் பகிர முடியும். மேலும், இந்தாண்டு நவம்பர் மாதத்திற்குள் பயோமெட்ரிக் விவரங்களைச் சரிபார்ப்பதை தவிர, முகவரியைப் புதுப்பிப்பதற்கும், மற்ற விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கும் ஆதார் மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருக்காது.

ஏனெனில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பிறப்புச் சான்றிதழ், மெட்ரிகுலேஷன் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, PDS மற்றும் MNREGA தரவுத்தளத்தில் இருந்து உங்கள் முகவரி மற்றும் பிற விவரங்களைத் தேடும் ஒரு புதிய நெறிமுறையை உருவாக்கியுள்ளது. இது குடிமக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவது மட்டுமின்றி, ஆதார் பெற போலி ஆவணங்கள் பயன்படுத்தப்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
Masked ஆதார் என்றால் என்ன..? இந்திய குடிமக்களுக்கு பாதுகாப்பை வழங்கவும், மோசடி தொடர்பான அபாயத்தை குறைக்கவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் Masked ஆதார் கார்டை அறிமுகம் செய்தது. பொதுவாக ஆதார் கார்டில் 12 இலக்க தனித்துவ எண்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், மாஸ்க்டு ஆதார் கார்டில் 12 இலக்க ஆதார் நம்பரில் முதல் 8 நம்பர் மறைக்கப்பட்டு, கடைசி 4 நம்பர் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.
இதுதொடர்பாக UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் கூறுகையில், இந்த புதிய செயலி ஏஜென்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் இயந்திரங்களில் சுமார் 2,000 இயந்திரங்கள் தற்போது புதிய கருவிக்கு மாற்றப்பட்டுள்ளன. கைரேகைகள் மற்றும் IRIS வழங்குவதைத் தவிர, வீட்டிலேயே இருந்தபடியே மற்ற அனைத்தை சேவைகளையும் விரைவில் பெற முடியும். முகவரிகள், தொலைபேசி எண்களைப் புதுப்பித்தல், பெயர் மாற்றம் மற்றும் தவறான பிறந்த தேதியை சரிபார்த்தலை கூட வீட்டில் இருந்தே செய்து கொள்ள முடியும்.
QR குறியீடு அடிப்படையிலான மொபைல்-டு-மொபைல் அல்லது ஆப்-டு-ஆப்-டு-ஆப் ஆதாரை மாற்ற அனுமதிப்பது தவறான பயன்பாட்டைச் சரிபார்க்க மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது, மேலும், பல நோக்கங்களுக்காக ஹோட்டல்களில் செக்-இன் செய்வது முதல் ரயிலில் அடையாள சரிபார்ப்பு வரை பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
சொத்துப் பதிவின் போது துணைப் பதிவாளர்கள் மற்றும் பதிவாளர்களும் இதைப் பயன்படுத்தலாம் என்றும் ஏனெனில் இது பெரும்பாலும் மோசடிகள் நடைபெறும் இடங்களில் நிகழும் என்றும் தெரிவித்துள்ளார். சொத்துக்களைப் பதிவு செய்ய வருபவர்களின் சான்றுகளைச் சரிபார்க்க ஆதாரைப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளை UIDAI விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் சில மோசடிகளைத் தடுக்க முடியும் என்றும் UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications