இந்தியாவில் ரூ.4,473 கோடி முதலீடு செய்ய அமேசான் முடிவு.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : அமெரிக்காவின் ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம், தனது இந்திய பிரிவில் 4472.50 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக இதன் இந்திய ஆலையில் விற்பனை பிரிவு, அமேசான் பே, அமேசான் சில்லறை பிரிவில் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்தியாவில் ரூ.4,473 கோடி முதலீடு செய்ய அமேசான் முடிவு.. !

இதன் விற்பனையாளர் சேவைகளில் 3,400 கோடி ரூபாயும், அதன் அமேசான் பே தளத்திற்கு 900 கோடி ரூபாயாகவும், இதே சில்லறை வர்த்தக பிரிவில் 172.50 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது.

ஹெச் டி எஃப் சி அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 79% அதிகரிப்பு..!ஹெச் டி எஃப் சி அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 79% அதிகரிப்பு..!

இந்தியாவில் உணவு சில்லறை விற்பனையில் கவனம் செலுத்தும் புதிய உள்ளூர் நிறுவனமான பிளிப்கார்ட் ஃபார்மார்ட் அமைக்க, அரசாங்க உரிமங்களுக்கு இதன் போட்டியாளரான பிளிப்கார்ட் நிறுவனம் விண்ணபித்த பின்னரே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிளிப்கார்ட் ஆரம்பத்தில் இந்த வணிகத்தில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் வணிகத்திற்கான விநியோகச் சங்கிலி சேமிப்பு மற்றும் தளவாடங்களை அளவிடுவதால், மேலும் முதலீடுகள் செய்யலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிளிப்கார்டின் பெற்றோர் நிறுவனமான வால்மார்ட்டின் உணவு சில்லறை வியாபாரம் பிரிவில் நிபுணத்துவம் பெறுவதைப் பார்க்கிறது. இது அமெரிக்க நிறுவனத்தின் ஒரு பெரும் பகுதியை கொண்டுள்ளது. வால்மார்ட் ஏற்கனவே இந்தியாவில் பணம் எடுத்து செல்லும் வர்த்தகத்தை செய்து வரும் நிலையில், மேலும் நாட்டிலுள்ள விவாசயிகளுடனும் கூட்டாண்மையுடனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான அடுத்த போர்க்களமாக உணவு மற்றும் மளிகை இடம் உருவாகி வருவதை பிளிப்கார்டின் திட்டங்கள் காட்டுகின்றன.

இந்த நிலையில் கடந்த ஆக்ஸ்ட் மாததில் கிஷோர் பியானியின் ஃபியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை அமேசான் வாங்குவதாக அறிவித்தது.

இந்த நிலையில் ஃபியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்திற்கு நாடு முழுவதிலும் 1500 ஸ்டோர்களும், இதில் பிக் பஜாரில் உள்ள 293 நிறுவனங்களும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் படி இந்த நிறுவனத்தை அமேசான் வாங்கும்போது, இன்னும் வலுவாக தனது காலடியை இந்தியாவில் ஊன்றும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் அமேசான் எதிர்கால சில்லறை வர்த்தகத்திலும் குறிப்பிட்ட நிலையான பங்குகளை வைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

E-commerce giant Amazon to invest Rs.4,473 crore in Indian plant

E-commerce giant Amazon to invest Rs.4,473 crore in Indian plant and it's develop retail segment, Amazon pay, seller services.
Story first published: Tuesday, October 29, 2019, 17:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X